'வியவற்க எஞ்ஞான்றும் தன்னை' என்னும் வள்ளுவம் உணராமல் ஒவ்வொருவரும் தம்மைப்பற்றி உயர்வாக எண்ணுவதும் கட்சி மாயையில் மக்கள் வீழ்ந்து கிடப்பதும் தமக்கே உரிய விருப்பு வெறுப்பை மறந்து விட்டுத் தேர்தல் நேர ஆதாயத்தில் வாக்காளர்கள் வீழ்வதும் மக்களாட்சி முறையைக் கேலிக் கூத்தாக்குகின்றன. எனவே, திரு முருகன் கூறுவது போல் கேலிக்கூத்துகள் தொடர்கதையாவதைத் தவிர்க்க முடியாது. இருப்பினும் வேறொரு கேள்வி. 86 அகவை வரை ஆட்சிச்சுமை, கட்சிச்சுமை, குடும்பச் சுமைகளுக்கடையே படைப்பாளியாகவும் சுறுசுறுப்பான உழைப்பாளியாகவும் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துபவராகவும் உள்ள கலைஞரின் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து தெரிவித்து இரு்க்கலாமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/3/2009 3:06:00 AM
6/3/2009 3:06:00 AM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக