இலங்கையில் பாரியளவில் மனிதப்பேரவம் ஏற்பட இந்தியாவே காரணம் |
பிரசுரித்த திகதி : 01 Jun 2009 |
இலங்கையில் சுமார் 20 ஆயிரம் பொதுமக்கள் கடந்த மாதம் வன்னியில் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்டமைக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும் என இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா குற்றம் சுமத்தியுள்ளார். இந்தியா பொதுமக்களின் இழப்புகளை தவிர்ப்பதில் தோல்வி கண்டுள்ளதாக இரண்டு சர்வதேச மனித உரிமை குழுக்கள் குற்றம் சுமத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். களத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே இந்தியா இந்த விடயத்தில் நடத்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள 60 மில்லியன் தமிழர்களை புறக்கணித்து இலங்கைக்கு இராணுவ தளபாடங்களும் பயிற்சிகளும் புலனாய்வு ஊக்குவிப்புகளும் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தன. அத்துடன், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஈடாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா இலங்கைக்கு ஆயுத விற்பனையை கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வந்ததாகவும் மேத்தா சுட்டிக்காட்டியுள்ளார். |
திங்கள், 1 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக