செவ்வாய், 2 ஜூன், 2009

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிலிருந்து திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்: இலங்கை அமைச்சர்

தினமணி
First Published : 02 Jun 2009 11:52:00 PM IST


கொழும்பு, ஜூன் 1: தமிழகத்திலும் சுற்றுவட்டாரத்திலும் அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர். இது தொடர்பாக பேரிடர் நிவாரண சேவை அமைச்சர் அமீர் அலி திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் கும்மிடிப்பூண்டி, ராமேசுவரம் உள்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் இலங்கை தமிழர்கள் வசிக்கின்றனர். இந்த முகாம்களில் வசிக்கும் சுமார் 1 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்வது பற்றி அரசு பரிசீலிக்கிறது. விடுதலைப்புலிகள்-ராணுவம் இடையேயான தற்போதைய போர் காரணமாக சொந்த வீடு, உடமைகளை விட்டுவிட்டு சுமார் 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். இவர்கள் வவுனியாவிலும் பிற பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு புதிதாக வீடு கட்டி மறுவாழ்வு ஏற்பாடுகளைச் செய்து தருவதே முதற்கட்டப் பணியாக இருக்கும். அதற்குப் பிறகு இந்தியாவில் வசிக்கும் தமிழ் அகதிகளை அழைத்துவருவது பற்றி தீர்மானிப்போம். இந்தியாவில் தங்கியுள்ள அகதிகளில் பெரும்பாலானோர் இலங்கை திரும்ப ஆர்வமாக உள்ளனர். இவர்களில் இலங்கை இந்த ஆண்டு குடியுரிமை வழங்கிய 28 ஆயிரத்து 500 பேரும் அடங்குவர். உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் இவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தாமதமானது. நாடாளுமன்றத்தில் பல மாதங்களாக நடந்த விவாதத்துக்குப் பிறகு ஜனவரியில் இவர்களுக்கு குடியுரிமை தரப்பட்டது. நீண்டகால இனப்போர் காரணமாக இலங்கையை வீட்டு நிறைய பேர் அகதிகளாக இந்தியா சென்றனர். இலங்கைக்கு இவர்கள் திரும்ப வசதியாக உரிய ஆவணங்கள் வழங்கப்படும் என்றார் அமீர் அலி. அகதிகள் குடியுரிமைக்கான நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகரன் கூறியதாவது: தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளில் ஏராளமானோர் சொந்த ஊர் திரும்ப ஆர்வம் காட்டியுள்ளனர். இவர்கள் அனைவரும் படிப்படியாக சொந்த ஊர் திரும்பலாம் அதற்கான ஆவணங்கள் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகி விட்டது என்றார் சந்திரசேகரன்.
கருத்துக்கள்

தமிழர் தாயகமான தமி்ழ் ஈழத்தை அமைத்தால் அனைவரும் மகிழ்ச்சியாகத் தாயகம் திரும்ப வாய்ப்பாக இருக்கும். அதுவரை இத்தகைய போலி அறிவிப்புகளால் பயன் இல்லை. ஏனெனில் ஈழப் பகுதியில் தடுப்பு முகாம்கள் என்ற பெயரில் வதைக் கூடங்களில் வைத்திருப்பவர்களை வாழ்விடங்களுக்கு அனுப்பவே 5 ஆண்டுகள் ஆகும் எனச் சிங்கள அமைச்சர்கள் பேசியுள்ளனர. எனவே, இத்தகைய அறிவிப்பு உலக நாடுகளிடம் பொருளுதவி வாங்கச் சிங்கள அரசு போடும் நாடகமே தவிர வேறு ஒன்றும் இல்லை. உலக நாடுகளே! மாந்தர் நேயத்துடன் செயல்பட்டு விரைவில் தமிழ ஈழத்தை அமையுங்கள்! பிற நாடுகளில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தத்தம் வாழ்விடங்களில் மகிழ்ச்சியாக வாழச் செல்லட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/2/2009 3:12:00 AM

No one in the world wants to be identified as a refugee. Tamils refugees in India do not have the fear that they would be targetted by the Singhala mobs and they would prefer to stay in India until tamil state is born in Srilanka. Saba

By saba
6/2/2009 2:36:00 AM

Nalla mudivu but please assure a peacefullife with equal rights for them. They are also the citizen of Srilanka.They sholudnot be blamed for terror activities .It is the past.Forget and start a new start. It is the duty of srilankan govt to win the cofidence of helpless Tamil people and try to make a amicable situation there. What aboutthe refugees of foreigncountries.They sholud be first called from there.it will improve the ecomomy of Srilanka

By ramya
6/2/2009 12:58:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக