செவ்வாய், 2 ஜூன், 2009

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1243935625&archive=&start_from=&ucat=3&
இன்று: செவ்வாய்க் கிழமை, ஜுன் 2, 2009
பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தல்
பிரசுரித்த திகதி : 02 Jun 2009

தமிழரின் சார்பில் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திரு ஜோன்மெரி யுலியா (பிரான்ஸ்) ஜனனி ஜனநாயகம் (பிரித்தானியா) ஆகியோருக்கு பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

பிரான்ஸில் தமிழர் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் திரு. ஜோன் மெரி யூலியா அவர்கள் வெற்றிபெற தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்ஸ் தனதுவாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறது.

கடந்த பலவருடங்களாக தமிழர்களின் விடுதலையில் தன்னை இணைத்து கொண்டு உழைத்து வரும் திரு. யூலியா அவர்கள் இன்று தோன்றியுள்ள இறுக்கமான நிலையில் தமிழர்களின் நீதியான போராட்டத்தை உலகஅரங்கில் வலுவானநிலையில் உரைக்கும் முகமாக ஐரோப்பியபாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் வரலாற்றுத்துறை ஆசிரியராக பணிபுரிந்துகொண்டு இருக்கும்போதே எமது நாட்டின் போராட்ட வரலாற்றை பிற சமூகத்திடக் கொண்டு செல்வதற்கு தனது மொழி அறிவையும், வரலாற்று அறிவையும் அர்பணித்துக் கொண்டவர் 83இல் தமிழர்;மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பை பிரஞ்சு மக்கள் அறியும்வகையில் பிரஞ்சு மொழியில் 'ஜெனசிட் தமிழ்' என்னும் நூலை வெளிக்கொனந்தார். அதேபோல் இங்கு பலஅரசியல் பிரமுகர்களின் சந்திப்பில் எம்மினத்தின் விடிவிற்கான போராட்டத்தை ஆணித்தரமாக முன்வைத்து அவர்களின் ஆதரவையும,; கவனத்தையும் எம் பக்கம் திருப்பியவர். இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் எமது நிலைப்பாட்டை தெரிவிக்க முன்வந்துள்ளார்கள் தமிழர்கள் நாம்; அதற்கான ஆதரவை தெரிவித்து வெற்றிபெற செய்தல்வேண்டும்.


இன்று இலங்கையில் ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்பிரதிநிதிள் சுதந்திரமாக இயங்கமுடியாதநிலையில். புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து தடுப்புமுகாம்களுக்கு அனுப்பப்பட்டு, அவ்விடங்களில் தேர்தல் நடத்த சிங்கள அரசு திட்டமிட்டு வரும்நிலையில். எமக்கான அரசியல் பிரதிநிதிகளை எம்மால் தெரிவுசெய்யமுடியாத நிலையில் எமக்கான பிரதிநிதியை ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு புலம்பெயர்ந்த நாங்கள் தெரிவுசெய்து அனுப்பும் சந்தர்பம் எமக்கு கிடைத்துள்ளது இதனை புலம்பெயர்ந்து வாழும் நாம் சரியாக உபயோகித்துக்கொள்வதினூடாக எமது சுதந்திரத்தை உறுதிசெய்யமுடியும்

எம்மில் பலர் எத்தனையோ தேசிய கட்சிகளிற்கு ஆதரவாய் இருந்தாலும் எமது பொதுப்பிரச்சனையை முன்வைத்து ஐரோப்பிய பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் திரு.யூலியா அவர்களைகட்சி பேதமின்றி ஆதரித்து எமது மக்களின் விடுதலையை முனைப்பு பெறவைக்கவேண்டும். இவரின் வெற்றிக்காக அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் ஆதரவுகொடுக்கும்படி கேட்டுக்கொள்வதுடன் பிறநாட்டு நண்பர்களின்; ஆதரவையும் திரட்ட உழைக்கவேண்டுமென தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது இதே வேளையில் லண்டனில் போட்டியிடும் இளம்தலைமுறை செல்வி.ஜனனி ஜனநாயகத்தின் வெற்றிக்கும் எமது வாழ்துடன் கூடிய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.


தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு � பிரான்ஸ்

<< BACK>>



பிடித்த செய்திப் பக்கமாக்க அழுத்தவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக