பிரித்தானிய தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஈவினிங் ஸ்டான்டட் நாளிதழ் |
பிரசுரித்த திகதி : 01 Jun 2009 |
உடல் நலம் குன்றிய நிலையில் உள்ள அடேல் பாலசிங்கம் அம்மையாரை, சிறுவர்களுக்கு சயனைட் வழங்கியவர் என்றும் அவர் தூண்டுதலின் பெயரில் பிரித்தானியாவில் பலபோராட்டங்கள் நடப்பதாகவும் செய்தியை வெளியிட்டுள்ளது ஈவினிங் ஸ்டான்டட்(EVENING STANDARD) நாளிதழ். எமது விடுதலைப் போராட்டத்தை வெளிநாடுகளில் சீர்குலைக்க, இலங்கை அரசு சில செய்தியாளர்களை விலைக்கு வாங்கி இப்படியான கட்டுரைகளை நாளிதழ்களில் பிரசுரிக்கச் செய்கிறது. இந்த கட்டுரையை எழுதியவர் அமர் சிங் எனும் ஒரு சீக்கியர் ஆவார். பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழ் உறவுகளும் கீழ்காணும் மின்னஞ்சல்லூடாக குறிப்பிட்ட நாளிதழின் ஆசிரியருடன் தொடர்புகொண்டு, உங்கள் கண்டனங்களை உடனே வெளிப்படுத்துங்கள். இங்கு மக்கள் உண்ணாவிரதம் , மற்றும் தொடர்போராட்டம் என தமது சக்திக்கு மீறி உணர்ச்சிபூர்வமாக முனேடுத்துவரும் நிலையில், எமக்கு உதவிசெய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமல் இருந்தால் அதுவே போது என்பதே எமது மக்களின் ஒருமித்த கருத்தாக இருக்கவேண்டும்... http://www.thisislondon.co.uk/standard/article-23701964-details/article.do?ito=newsnow& |
திங்கள், 1 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக