நல்வழி
First Published : 31 May 2009 12:53:00 AM IST

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்மாண்டார் வருவாரோ மாநிலத்தீர் - வேண்டாநமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்எமக்கென்னென்று இட்டுண்டு இரும். (பா-10)இப்பெரும் நிலவுலகில் வாழும் மனிதர்களே! பல ஆண்டுகள் அழுது புரண்டாலும் இறந்து போனவர் மீண்டும் திரும்பிவர மாட்டார்கள். எனவே, அழுவதை நிறுத்தி நமக்கும் இறப்பே வழியாகும் என்பதை உணர்ந்து நாம் சாகும்நாள் வரையிலும், நமக்குச் சொந்தமானது ஒன்றுமில்லை என்று எண்ணி, வந்து இரப்பவர்க்கு ஈகை செய்து தானும் உண்டு வாழ வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக