வியாழன், 28 மே, 2009

ஈழம்: கனவிலிருந்து வாழ்க்கைக்கு...

சமஸ்

தினமணி
First Published : 28 May 2009 02:55:00 AM IST
கருத்துகள்

மேலும் 10000 வீரர்களைப் படையில் சேர்க்க இருப்பதாகச் சிங்கள அரசு அறிவித்ததையும் விடுதலப் புலிகள் அமைதி வழிக்குத் திரும்ப வாய்ப்பு அளிக்க மாட்டோம் என அறிவித்துள்ளதையும் பார்க்கையில் ஒரு மிகப் பெரிய போர்க்களம் சோகத்தில் முடிந்துள்ளது. ஆனால் போர் முடியவில்லை என்றே தோன்றுகின்றது. எனவே கட்டுரையில் குறித்துள்ளது போல் பன்னாட்டு மன்பதையும் சிங்கள அரசின் மீது அழுத்தம் கொடுத்துப் போரை முற்றிலுமாக நிறுத்தவும் ஈழத் தமிழர்களுக்குச் சம உரிமை கொடுக்கவும் தமிழ் ஈழம்தான் தீர்வு என்னும் பொழுது அதை ஏற்கவும் செய்ய வேண்டும். பிற நாடுகள் போர்க்கருவிகள் வழங்க முதலில் தடை செய்தாலே இவை சாத்தியமாகும். மிகப் பெரிய பேரவலத்திற்கு ஆளான மக்களை மன உளைச்சலற்ற மன்பதையாக மாற்ற தமிழ் ஈழமே தீர்வு என்பதை உலக நாடுகள் உணர வேண்டும். வாழ்க தமிழ் ஈழம்! மலர்க உலக-ஈழ உறவுகள்! அழிவிலிருந்து மீள்க ஈழத் தமிழர்கள்! அரசின் தவறான கொளகையால் சிதைவுற்ற படை வீரர்கள் குடும்பத்தினரும் மறுவாழ்வு பெறுக! அன்பான வேண்டுதலுடன்

இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 5:13:00 AM



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக