புதன், 27 மே, 2009

நல்வழி
தினமணி

First Published : 26 Apr 2009 11:48:00 PM IST


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமினென்றால் போகா - இருந்தேங்கி நெஞ்சம்புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில். (பா-5) ஊழ்வினைப் பயனாலன்றி, வரக்கூடாதவைகளை வருந்தி அழைத்தாலும் வராது. வந்து கூடியவைகளை வெறுத்துத் தள்ளினாலும் போகாது. இவ்வாறு நன்மையும் தீமையும் ஊழ்வினைப் பயனாலே விளைவன என்பதை அறியாத மக்கள், எப்பொழுதும் இன்பத்தை நாடியும், துன்பத்தை வெறுத்தும், கவலைகளிலேயே மூழ்கிக் கிடப்பதையே தம் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக