வியாழன், 28 மே, 2009



கருத்துகள்

ஒரு வழியாக வாசன் கனவு நனவாகியது. இனியேனும் உட்கட்சிப் பூசலை வளர்க்காமல் கட்சி ஒற்றுமைக்கும் நாட்டு வளர்ச்சிக்கும தமிழ் வளர்ச்சிக்கும் ஈழத் தமிழகம் மலருவதற்கும் கடமை யாற்றுவாராக! ஆரவாரத் தமிழ் உரைகளை விடுத்து ஆழமான முறையில் தமிழின் தொன்மை, நுண்மை, வளமை , செழுமை முதலானவற்றைப் பிறர் அறியச் செய்வாராக! அனைத்து அமைச்சர்களுமே அணிச்சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டு நலனை உயர்த்துவார்களாக! உலக அமைதிக்குப் பாடுபடுவாரகளாக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 4:15:00 AM

2/2) (தொடர்ச்சி) எளிமை ஒன்றையே சிறப்பாகக் கொண்டுள்ள அவர் கருத்தாழத்தையும் சிறப்பாக வளர்த்துக் கொண்டார் என்றால் பிற அணியிலும் தனித்து விளங்கி உயர் பதவிகள் அவரைத் தேடிவரும். எனவே அமைச்சராகும் வாய்ப்பை இழந்தமையை மதிப்புக் குறைவாக எண்ணாமல் தொண்டருள் முதன்மையானவராகத் திகழ்வாராக! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 4:10:00 AM

1/1)சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என அமைச்சுக் குழுவிலோ தனிப் பொறுப்பிலோ பதவி வாய்ப்பு இல்லாமையால் கனி மொழி இடம் பெறவில்லை. கட்சிப்பணியில் ஈடுபடுவதாக அவர் அறிவித்திருந்தார். உண்மையிலேயே இராகுலி்ன் வழியில் கட்சி வேலைகளில் ஈடுபடலாம். திமுக அடுத்த தலைமுறையினரைப் பகுத்தறிவுப் பாதையிலோ தமிழ் இயக்க உணர்விலோ வளர்க்க வில்லை. மாறாகக் கட்சித் தொண்டர்களை ஃச்டாலின் அணி, அழகிரி அணி, தயாநிதி அணி, கனிமொழி அணி என்பது போல் குடும்பம் சார்ந்த அணியை உருவாக்குவதில்தான் கருத்து செலுத்தியுள்ளது. இதனால கலைஞருக்குப் பின் யார் வந்தாலும் அது குடும்ப அணியாகத்தான் இருக்கும் என்பதற்கான வழிவகையை உருவாக்கி விட்டது. அவ்வாறில்லாமல் கனிமொழி மிகுதியான இயக்கம் சாரந்த நூல்களைப் படித்து நாடு முழுவதும் சென்று நல்ல பரம்பரையை உருவாக்கினார் என்றால் எல்லா அணியையும் முந்தித் தனியாய் நிற்பார் என்பதில் ஐயமில்லை. (தொடர்ச்சி காண்க) இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 4:09:00 AM

2/2 ) தமிழக அமைச்சர்கள் மத்திய அரசின் அங்கம் என்றாலும் தமிழக நலன் அடிப்படையிலேயே மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அமைய பாடுபடுவாரக்ளாக! அண்டை நாட்டிற்கு வழங்கும் ஆயுதக் கொடைகளை நிறுத்தி அண்டை நாடுகளையும் அமைதிப் பூங்காவாக ஆக்குவார்களாக! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 4:08:00 AM

1/2) நேற்றைய தொலைக்காட்சி அறிவிப்பில் அமைச்சர்அவைப்பட்டியலில் குழுவின் இறுதிப் பெயராக மு.க.அழகிரி பெயர் இருந்தது. ஆனால், இதில் முதலாவது பெயராக உள்ளது. எவ்வாறிருப்பினும் புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துகள். நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40 விழுக்காட்டினர் குற்றவாளிகள் என்ற புள்ளி விவரத்தின்படி அந்த விகிதம் இந்த அமைச்சரவையிலு்ம் எதிரொலிக்கலாம். எனினும் இனியேனும் திருந்திய பாதையில் செல்வார்கள் என்ற நம்பிக்கையில் அனைவருக்கும் நல் வாழ்த்துகள். அமைச்சரவைக்குரிய கூட்டுப் பொறுப்பை ஏற்று நாட்டு வளததிற்கும் நாட்டு ஒற்றுமைக்கும் உலக அமைதிக்கும் பாடுபடுவாரக்ளாக! தாங்கள் சார்ந்த தொகுதி வளர்ச்சிக்கும் மாநில வளர்ச்சிக்கும் கட்சி வேறுபாடின்றிப் பாடுபடுவாரகளாக! தெரியாத தேவதையை விடத் தெரிந்த பேய் மேல் என்பார்கள். எனவே, குறிப்பிட்ட ஒருவரை மட்டும் சாடாமல் அவரினும் மோசமானவர்கள பலரும் இதில் இடம் பெற்றிருக்கலாம். தெரியாமல் வசை பாட வேண்டா. அடுத்த சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்வரின் மகன் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி நல்லதே செய்வார் என நம்புவோம். (தொடர்ச்சி காண்க)

By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 4:07:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக