செவ்வாய், 26 மே, 2009

டி.ஆர்.பாலு: ஒதுங்கினால் ஒதுக்கப்படுவீர்கள்! வழிவிட்டு முன்னேறுங்கள்!

புதுகை கல்லூரியில் டி.ஆர். பாலு: அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி?

தினமணி
First Published : 26 May 2009 02:01:00 AM IST

Last Updated : 26 May 2009 02:24:16 AM IST

புதுக்கோட்டை, மே 25: மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாததால், அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தில்லிக்குச் செல்லாமல், தனது குடும்பத்தினரால் நடத்தப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு திங்கள்கிழமை வந்து தங்கியுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் தாங்கள் கேட்ட இடங்கள், இலாகாக்கள் கிடைக்காததால், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கப்படும் என திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறி வந்தார்.

எனினும், காங்கிரஸ் முன் வைத்த சமரச யோசனையை ஏற்று மத்திய அமைச்சரவையில் இடம் பெற திமுக தலைவர் ஒப்புக் கொண்டார்.

இதன்படி, மு.க. அழகிரி உள்ளிட்டோருக்குப் பதவி வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் திங்கள்கிழமை தில்லிக்கு விரைந்தனர்.

ஆனால், நாடாளுமன்றக் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தில்லிக்குச் செல்லாமல், திடீரென புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே புனல்குளத்தில் உள்ள அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிக்கு வந்து தங்கியுள்ளார்.

அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படாததால், அதிருப்தியடைந்த அவர் இங்கு தங்கியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது செல்போன் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததுடன், யாரையும் சந்திக்க விரும்பாமல் தனிமையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்

இப்படியெல்லாம் தன்மானம் பார்த்தால் எப்படி? குடும்பத்தவர்களிடமும் குடும்பத்தில் இணைந்தவர்களிடமும் போட்டி போடுவது முறைதானா? குடும்ப அரசியல் மேலோங்கும் பொழுதெல்லாம் அமைதியாக இருந்து அணி சேர்ந்து விட்டு, உங்களுக்கு வயிற்றுவலி வரும் பொழுது மட்டும் அலறினால் பயன் கிடைக்குமா? உங்களை மேலும் ஒதுக்குவது எப்படி என்று எங்களுக்குத் தெரியாதா? ஏதோ இது வரை மாற்றாளாக - பினாமியாக - நீங்கள் துய்த்ததை - அனுபவித்ததை - தலைவரின் மகன் நேரடியாகவே பெறட்டுமே! கனிவான பார்வை பட்டவருடன் போட்டியிடாமல் ஏதோ காலத்தை ஒப்பேற்ற வழி பாருங்கள்! பொறுமைக்குப் பரிசு கிடைக்காமலா போகும்? பாமக வில் திருஅ.கி.மூர்த்தி புறக்கணிப்பைப் பொறுத்துக்கொண்டு புன்னகையுடன் தன் கடமையை ஆற்றவில்லையா? அவரிடம் இருந்தாவது கற்றுக் கொள்ளுங்கள். இதுவரை ஆண்டது போதும் என அமைதி காக்க வேண்டும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/26/2009 3:45:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக