வெள்ளி, 29 மே, 2009

இலங்கை ராணுவ தாக்குதலில் 20 ஆயிரம் பொதுமக்கள் பலி: டைம்ஸ் இதழ்

தினமணி
First Published : 29 May 2009 04:10:06 PM IST

Last Updated : 29 May 2009 04:13:26 PM IST

இலண்டன், மே 29: விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இத்தகைய அதிர்ச்சியூட்டும் தகவலை லண்டனிலிருந்து வெளியாகும் ""டைம்ஸ்'' இதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது. 30 ஆண்டுக்காலமாக நடைபெற்றுவந்த இன மோதலை முடிவுக்குக் கொண்டு வர இலங்கை ராணுவம் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டது. அப்பாவிப் பொதுமக்களைப் பற்றிக் கவலைப்படாமல் கொத்துக்குண்டுகள் மற்றும் பீரங்கித் தாக்குதலை ராணுவம் நடத்தியது. இதில் 20 ஆயிரம் பேர் பலியானதாக செய்தி வெளியிட்டுள்ளது. பீரங்கித் தாக்குதல் மற்றும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு பல நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் பீரங்கி தாக்குதலை நிறுத்துவதாக இலங்கை அரசு அறிவித்தது. இருப்பினும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஒரு லட்சம் தமிழர்கள் இருப்பதாகவும், இப்பகுதியில் தாக்குதல் நடத்தப்படாது என்றும் இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால் டைம்ஸ் இதழ் நடத்திய புலனாய்வு விசாரணை மற்றும் புகைப்படங்களில், இலங்கை ராணுவம் உலக நாடுகளுக்கு அளித்த உறுதி மொழியை மீறியுள்ளது தெரிய வந்துள்ளது. போஸ்னியாவில் 1995-ம் ஆண்டு ஏற்பட்ட மனிதப் படுகொலை மற்றும் சூடானில் உள்ள தார்ஃபூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களைப் போல இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல் அமைந்துள்ளது என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதியில் மட்டும் இலங்கை ராணுவ நடவடிக்கையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. மே 19-ம் தேதி வரை ராணுவ தாக்குதலில் தினசரி ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருந்து தப்பிய தேவாலய பங்கு தந்தை அமல்ராஜ் இதை உறுதி செய்துள்ளார். இவர் தற்போது மாணிக் பகுதியில் உள்ள அகதி முகாமில் தங்கியுள்ளார். இந்த முகாமில் 2 லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர். உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்த முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

டைம்சு இதழைப் படித்துப் பார்த்த யாராக இருந்தாலும் செயதியையும் காட்சிப் படங்களையும் கண்டு உள்ளம் கலங்காமல் இருக்க மாட்டார்கள். இனப்படுகொலை, கூட்டம் கூட்டமாகப் படுகொலை, பேரழிவு, சிறுபான்மை இனத்தைத் துடைத்துப் போட்டாற் போல் அழித்தல், வன் கொடுமை, பொய்யை மூலதனமாகக் கொண்டு உயிர்களை அழித்து உடைமைகளயும் நிலங்களையும் நாசப்படுத்தல் முதலான பல அழிவு வேலைகளைச் சிங்கள அரசு இந்தியா முதலான நாடுகளுடன் நிறைவேற்றியுள்ள எழுத இயலாக் கொடுமைகளைப் புரிந்து கொள்ளலாம். எஙகோ தொலைவில் இருக்கின்ற இங்கிலாந்தில் இருந்து அவலக்குரல் எழுகின்றது. இங்கு அதன் உச்சியில் வீற்றிருக்கின்ற காங்.அரசாளும் இந்தியாவில் இருந்து அழிப்போருக்குத் துணையான குரல்தான் எழுகின்றது. என்ன வெட்கக் கேடு! தினமணி நேயர்களுக்கு இதனை வெளியிட்ட தினமணிக்கு நன்றி.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/29/2009 4:29:00 PM

no ellam tamil is alive to record anymore message. or ellam tamils are afraid to express their ideas. dictator president rajapaksje you are more than a hitler. you are also able to succeed in selling organised lies to the world. the world is prefered to be fooled. india is the best among the those fooled. hats off to the majoritarian democracy.

By arulrasu
5/29/2009 4:28:00 PM

Thanks India,DMK, KARUNAS, Menon, Narayanan, Sonia. When IPKF killed 2000 srilankans and raped the ladies we got one indian primeminister and one sriLANKAN president paid the price. Now 10 times atrocities happened. The effect will be unimaginable for India and Srilanka. This crime will not go unnoticed. India and Srilanka - Please get ready to pay for this. Last time jndixit, romesh bandari crated this. This time Menon and Narayanan(The most STUPIDEST SECURITY ADVISER)CREATED THIS. Let the curse of souls will overpower you.

By kmv
5/29/2009 4:25:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக