வெள்ளி, 29 மே, 2009

சந்திராசுவாமி வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

தினமணி
First Published : 28 May 2009 04:43:53 PM IST


புது தில்லி, மே 28: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்திராசுவாமி வெளிநாடு செல்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தனி நீதிமன்றத்தில் ரூ. 10 லட்சம் ஜாமீன் தொகை செலுத்திவிட்டு செல்லுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.எஸ். சிர்புர்கர், ஆர்.எம். லோதா ஆகியோர் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்திராசுவாமிக்கு தொடர்புள்ளதால், வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அமலாக்க இயக்குநரகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அவரை அனுமதித்தால் அவர் இந்தியாவுக்கு திரும்பமாட்டார் என்றும் கூறியிருந்தது. இதை தில்லி உயர்நீதிமன்றம் ஏற்று வெளிநாடு செல்ல அனுமதி மறுத்தது. இதையடுத்து இது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. அங்கு இம்மனுவை விசாரித்த விடுமுறைக்கால நீதிபதிகள் சிர்புர்கர், லோதா ஆகியோர் சந்திராசுவாமி வெளிநாடு செல்ல அனுமதி அளித்துள்ளனர்.

போலியான இந்திய- சிங்கள ஒப்பந்தத்ததைச செயல்படுத்த இந்தியப் படை சென்றவுடனேயே தமிழ் ஈழத் தேசியத் தலைவரையும் தளபதிகளையும் படையினரையும் தீட்சித் கும்பல் கொல்ல முயன்ற பொழுது இராசீவ் உயிருடன்தானே இருந்தார். எனவே அவரது படுகொலைக்கும் ஈழத் தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொல்லும் பேரழிவுச் செயல்பாடுகளுக்கும் தொடர்பில்லை என்பதை நடுநிலையுடன் உணர்ந்து இனியாவது மனித நேயத்துடன் நடந்து ஈழத் தமிழர்களுக்குத் துணை நிற்போம்! உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிப்போம்! தமிழ் ஈழம் அமையத் துணை நிற்போம்! வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக இந்திய - ஈழ உறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/29/2009 3:26:00 AM

இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்கும் ஈழத் தமிழர்கள படுகொலைகளுக்கும் தொடர்பில்லை என்பது மெய்ப்பிக்கப்படுகின்றது. சந்திரா சுவாமி, சு.சாமி எனப் பலர் குற்றச்சாட்டு வளையத்திற்குள் சிக்கியும் விருப்பம் போல் திரியும் பொழுது ஈழத்தமிழர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? ஆனால், மேல்மட்ட அதிகார இனம் திட்டமிட்ட தமிழர் படுகொலைகளுக்கு இதனைக் காரணம் கூறி இராசீவ் குடும்பத்தினரைப் பேரழிவுச் செயல்பாடுகளுக்குள் சிக்க வைத்து விட்டனர். சோனியாவும் அவரின் குடும்பத்தினரும் இந்த வலையில் சிக்காமல் நடுநிலையுடன் எண்ணியிருந்தால் மனித நேயத்ததுடன்தான் நடந்து கொண்டிருப்பர். போலியான இந்திய- சிங்கள ஒப்பந்தத்ததைச செயல்படுத்த இந்தியப் படை சென்றவுடனேயே தமிழ் ஈழத் தேசியத் தலைவரையும் தளபதிகளையும் படையினரையும் தீட்சித் கும்பல் கொல்ல முயன்ற பொழுது இராசீவ் உயிருடன்தானே இருந்தார். எனவே அவரது படுகொலைக்கும் ஈழத் தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொல்லும் பேரழிவுச் செயல்பாடுகளுக்கும் தொடர்பில்லை என்பதை நடுநிலையுடன் உணர்ந்து இனியாவது மனித நேயத்துடன் நடந்து ஈழத் தமிழர்களுக்குத் துணை நிற்போம்! உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து

By Ilakkuvanar Thiruvalluvan
5/29/2009 3:25:00 A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக