ஞாயிறு, 24 மே, 2009

வெல்ல முடியாதவர்கள் புலிகள்

வெல்ல முடியாதவர்கள் புலிகளா? இராசபட்ச கருத்து

தினமணி

First Published : 24 May 2009 01:23:00 AM IST


கொழும்பு, மே 23: விடுதலைப் புலிகள் வெல்ல முடியாத சக்தி என்ற எண்ணம் தகர்ந்து விட்டது என்று இலங்கை அதிபர் மகிந்தா இராசபட்ச கூறியுள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை சுமார் 2 இ லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியது: நமது இராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்து பெற்றுத் தந்துள்ள சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே இனி முக்கியமான விசயம். பயங்கரவாதத்துக்கு எதிராக நான் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதையெல்லாம் முறியடித்துதான் இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம் என்றார் இராசபட்ச.
கருத்துகள்

வெல்ல முடியாதவர்கள்தாம் புலிகள்! முதுகில் இருந்து குத்தாமல் பொது மக்களைக் கேடயமாகப் பயன்படுததிக் கொண்டு புலிகள மேல் பழி போடாமல் எரி குண்டுகளையும் ஏவுகணைகளையும் வீசாமல் பிற நாடுகளைக் கூலிப்படையாக வைத்துக் கொள்ளாமல் போரில் இந்திய வீரர்கள் சாவதைப் புலிகள் விரும்பவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு இந்திய வீரர்களைக கொண்டே தாக்குதலை நடத்தாமல் நேரடியாக நேர்மையாகப் போர்நடந்தால் விடுதலைப்புலிகள் வெலல முடியாவதவர்கள்தாம்! இத்தனை மோசடிகள் நடததியும் விடுதலைப் புலிகளின் வீர மரண எண்ணிக்கையை விடச் சிங்களப் படையினர் இறந்த எண்ணிக்கையும் ஊனமுற்ற எண்ணிக்கையும் மிகுதியாக உள்ளமையே அவர்களின் வெற்றித் திறததைப் பறைசாற்ற வி்ல்லையா? மோசமான வெற்றியை விட நேர்மையான தோல்வியே மதிப்பு மிக்கது என்பதை நீர் அறிய மாட்டீரா? கொக்கரிக்கும இராசபட்சே உன் உள்ளம் அறியும்! உன் உணர்வு அறியும்! விடுதலைப் புலிகள் வெல்ல முடியாதவர்கள் என்று! பிறகு ஏன் இந்த நாடகம்! உமது அழிவை வேண்டும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/24/2009 5:18:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக