செவ்வாய், 26 மே, 2009

தலையங்கம்:சட்டத்தின் சலுகையும் இல்லை

First Published : 25 May 2009 01:05:00 AM IST

Last Updated : 25 May 2009 02:45:11 PM IST

சட்டத்தின் பிடியிலிருந்து நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதெல்லாம் நல்ல வசனமாக மட்டுமே இருக்கலாம் போலும்.ஜேப்படித் திருடர்கள் உடனடியாகத் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி, கோடி கோடியாய் சொத்துச் சேர்த்தவர்கள் ஜாமீன் பெற முடிகிறது; வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதும், மீண்டும் பணியில் சேரவும்கூட முடிகிறது. இதற்குத் தேவை வாதத் திறமை மிகுந்த வழக்குரைஞரும், நிறைய பணமும்! சில நேரங்களில் அரசியல் நெருக்குதல் இருந்தாலும் உடனடி ஜாமீன் கிடைத்து விடுகிறது. வருண் காந்தியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தார்கள். ஆனால் அரசியல் கட்சிகளின் ஆதரவு இருந்ததால் அவரால் சிறையிலிருந்து வெளியே வந்து, வழக்கைச் சந்திக்க முடிகிறது. மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத், ஜாமீனில் வெளியே வருவதுடன் அரசியலிலும் ஈடுபட முடிகிறது. ஆனால், இத்தகைய பலம் இல்லாத டாக்டர் விநாயக் சென் போன்றவர்கள் சிறையிலேயே இருக்க நேர்கிறது.குழந்தை நல மருத்துவரான விநாயக் சென், சத்தீஸ்கர் மாநில மக்கள் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 14-ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தீவிரவாதிகளுக்கு உதவி செய்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால் இதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளிக்க இதுவரையிலும் சத்தீஸ்கர் அரசினால் முடியவில்லை. விநாயக் சென், மக்கள் உரிமைக் கழகத்தின் சத்தீஸ்கர் மாநில பொதுச்செயலர். சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா ஷாகீத் மருத்துவமனையை நிறுவி மலைவாழ் மக்களுக்குச் சேவை புரிந்து வந்தவர். உலக சுகாதாரம் மற்றும் மனித உரிமைக்காக வழங்கப்படும் "ஜோனாதன் மன் விருது' பெற்ற முதல் இந்தியர். ஏழைகளுக்குச் சேவை செய்ததற்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனை வழங்கும் "பால் ஹாரிசன் விருது' பெற்றவர். இவர் 1966 முதல் 77 வரை வேலூர் சிஎம்சியில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி . முடித்தவர்.இவர் மருத்துவர் என்பதோடு, அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்துப் போராடுபவரும்கூட. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளைச் சமாளிக்க ஆதிவாசிகளை உள்ளடக்கிய சால்வார் ஜுடும் என்ற அமைப்பை சத்தீஸ்கர் அரசு உருவாக்கியது. இவர்களுக்குத் துப்பாக்கிகள் கொடுத்து தீவிரவாதிகளை எதிர்கொள்ளப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் உறுப்பினர்களுக்கு மத்திய அரசு ரூ.1800, மாநில அரசு ரூ. 1,500 சம்பளமாக வழங்கின."தீவிரவாதிகளை ஒடுக்குவது அரசின் வேலை. இதில் பழங்குடி மக்களிடம் துப்பாக்கி கொடுப்பதால் தேவையற்ற சம்பவங்களும், குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடக்கின்றன' என்று சொல்லி, இதனைக் கடுமையாக எதிர்த்தவர் விநாயக் சென். இதனால் பல்வேறு சங்கடங்களுக்கு சத்தீஸ்கர் அரசு உள்பட நேர்ந்தது.டாக்டர் விநாயக் சென் ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மீதான பொய் வழக்குகளை அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் கோரி, அம்மாநிலத்தில் மக்கள் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அவருடன் படித்த, பணியாற்றிய, அவரை நன்கு அறிந்த மருத்துவர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவிட்டார்கள். அண்மையில் சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு இந்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரையிலும் சத்தீஸ்கர் அரசு அசைந்து கொடுக்கவில்லை.மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு விநாயக் சென் ஆதரவாகவும், உடந்தையாகவும் இருந்திருப்பாரேயானால், அதற்கான ஆதாரத்தை அளித்து, குற்றத்தை நிரூபித்து அவரைச் சிறையிலடைப்பதை யாரும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால், ஓர் அரசின் கொள்கையை எதிர்த்தார் என்பதற்காகவே அவரைக் கைது செய்து, ஆதாரம் இல்லாமல் சிறையில் வைத்து, ஜாமீனில் விடாமல் தடுப்பதன் மூலம் நஷ்டப்பட்டு நிற்பது பழங்குடி மக்கள்தான். குற்றம் நிரூபிக்க முடியாத நிலையில், சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிக்கு அளிக்கிறது நீதிமன்றம். சட்டம் தரும் சலுகையைக்கூட சத்தீஸ்கர் அரசு தரவில்லை.உலகின் பல்வேறு பொது அமைப்புகள், அறிவுஜீவிகள், மருத்துவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இதில் இந்திய அரசு தலையிட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனென்றால், உலகின் பல்வேறு அமைப்புகளும் இந்திய அரசைத்தான் குறைகூறுமே தவிர, சத்தீஸ்கர் மாநிலத்தை அல்ல.
கருத்துகள்

பயங்கரவாதம் மூலம் மக்களை ஒடுக்கிப் பயங்கரவாதிகளை உருவாக்கும் அரசில் இவ்வாறுதான் நிகழும். எனினும், அருமையாக அனைவரும் உணரும் வண்ணம் அரசியல் பின்னணியையும் விளக்கி நீதியையும் சுட்டிக் காட்டிய தினமணிக்குப் பாராட்டுகள்.

பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/26/2009 4:24:00 AM

It is sad Dr.VINAYAK SEN was arrested. It is quite natural that any Indian government is adamant on what they do or intend to do. It is no use expecting any corrective action from the Govt. side. There are so many incidents like this are reported. Why not the media, NGOs, Human rights forum, intellectual and other social organisation are expecting the Govt. to reverse the action. Why not they initiate legal action against the Govt. It is high time to get justices through supreme court to avert repetition of such atrocities.

By Chola
5/26/2009 12:20:00 AM

It is sad Dr.VINAYAK SEN was arrested. It is quite natural that any Indian government is adamant on what they do or intend to do. It is no use expecting any corrective action from the Govt. side. There are so many incidents like this are reported. Why not the media, NGOs, Human rights forum, intellectual and other social organisation are expecting the Govt. to reverse the action. Why not they initiate legal action against the Govt. It is high time to get justices through supreme court to avert repetition of such atrocities.

By Chola
5/26/2009 12:19:00 AM

WHAT A PITY Dr.VINAYAK SEN WAS BORN AS A HINDU,AND A DOCTOR HAD BEEN BORN A MUSLIM OR A POLITICIAN HE WOULD HAVE COME OUT VERY EASILY THAT IS SHAME! MOST OF THE POLITICIANS BOAST THAT INDIA IS A BIG DEMOCRACY IN THE WORLD!

By M. Annamalai
5/25/2009 8:40:00 PM

தவறுகளும் குற்றங்களும் மிகைத்தால் அதன் பலன் சிலகாலம் கழித்து அதைவிட கொடுந்தவறுகள் சமூகத்தில் மிகைக்கும்,அதை தீவிரவாதம் என்றோ,அடக்குமுறை க்கெதிரான கலவரம் என்றோ ,என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். இப்படித்தான் உலகின் பல்வேறு பகுதிகளின் கலவரங்கள். நீதி தாமதாமானாலோ,மறுக்கப்பட்டாலோ,கிடைக்காமல் போனாலோ,அதன் வெளிப்பாடு இப்படித்தான் போகும். அரசியல் வாதிகள் எது எதிலோ விளையாடினார்கள். சரி . மக்கள் நலனுக்காக போராடிய மனிதர்களின் நீதியிலுமா ? விளையாட்டு. வேண்டாம் விளையாட்டு. விளையாட்டு வினையாகும் என்பது இதுதான்.

By avataar
5/25/2009 6:31:00 PM

Journalism and free speech are main tenants of democracy.Hats off to Dinamani in bringing an editorial to expose injustice in the form of suppression of free speech.As one blogger suggested hope some will form a forum to have a group of advocates to have legal defense against such incidence.

By Kumaran
5/25/2009 4:21:00 PM

Today's editorial is social concssious editorial. I wish to pray for Binayaksen. Arun

By arun
5/25/2009 4:20:00 PM

I FELT THIS DOCTOR IS SOCIAL HARD WORKER. INSTEAD OF PUNISHMENT THEY SHOULD RESPECT.

By razack
5/25/2009 3:54:00 PM

Dear Editor If Chattisgarh govt and govt of india wants the public/tribes to take guns against the maoists then what is the need for army, BSF, airforce and so on. Especially the govt gives Rs 1800 and Rs. 1500;. If some one loses life in the battle what will the govt do. The govt of India, Minstry of defence spends 1lakh crore fpr defence system; But they want the tribes to take the guns against maoists, it is shame for the country. What the hell the army is doing. ? Rajiv sent Peace keeping force to a foriegn country srilianka, why is it not possible in Chattisgarh?

By Dr.Arasu
5/25/2009 3:18:00 PM

இந்தியாவில் நீதி என்பது சாதாரண குடிமகனுக்கு எட்டாக் கனி.அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் துணிந்து தவறுகளைச் செய்துவிட்டு தங்களது பணபலம்,அரசியல் பலத்தால் தப்பி விடுகிறார்கள்.அரசியல் கைப்பாவையான காவல்துறை நீதிமன்றங்களில் வழக்கு சம்பந்தமான ஆதாரங்களை முன் வைப்பதில்லை அல்லது சாட்சிகள் மிரட்டப்படுவார்கள்.வினாயக் சென் என்ன, இங்கே யாரும் அரசாங்கத்தை, அதன் நிர்வாகத்தை,கொள்கையை எதிர்த்து கேள்விகேட்கக் கூடாது.அதுதான் இங்கே ஜனநாயகம்.அதனால் தான் இங்கே ஏழைகளும், விவசாயிகளும் தங்களது உரிமையைக் கூட கேட்கப் பயந்துகொண்டு வறுமையுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள் அல்லது தற்கொலை செய்துகொள்கிறார்கள்.சட்டிஸ்கார் மாநில அரசாங்கத்தின் செயல்பாடானது பாதுகாப்பு சம்பந்தப்பட்டதில்லை.அது ஆணவம்!

By v pandiraja
5/25/2009 2:13:00 PM

What are you telling Mr.Editor? Is Dr.Vinayakram is a politician? Can you compare him with Shri Shri Sibu Soren? Dr.Vinayakram has not killed his PA. So no respite from these prolonged judicial procedure.

By santha
5/25/2009 10:57:00 AM

Plz. Look at the Bus Ticket Inspectors. How do they trying to catch a passenger one who travelling without tickets? Like that who will catch the Rich men / Official / Politician.

By prabu, Kuwait
5/25/2009 10:49:00 AM

I wish Dinamani invite volunteers of Advocates and form a forum of advocates who can file a case / arque and get these good people out of court / prison to serve the people. Everyone knows that money plays more seriously in favor of notorious criminals in all field. Let Dinamani kind of Patriotic news papers not only reveal the anomolies in the public but also find a way to protect good people from evils and devils. I appreciate Dinamani's bold and courageous Editorials.

By shanmugam
5/25/2009 10:48:00 AM

Thinamum Dinamaniyil varuvathu Thalaiyangangal Illai;Makkal Manasatchi. Ner konda parvai ; Nimirntha nan nadai; Nilathil yarukkum anzhatha nerigal Valarga Dinamani makkal sevai. Vazhthukkal.

By v.venu
5/25/2009 10:33:00 AM

what did the central do for the release of DR.binayaksen? what about supremecourt? both did nothing. the constitution says"the law of land prevails" has the chattshar govt. respected the law of nation? the international organisations show the concern over the release of DR.binayek sen.but our law enforcing government machinaries remain silent spectatare.only one option we have that we have to pray for his release .

By samuel
5/25/2009 9:49:00 AM

GREAT ARTICLE FROM DINAMANI. I REALLY ADMIRE THAT DINAMANI CONTINOUSLY BRINGING ISSUES TO TN PEOPLE WHICH CAN BE OF SOME EYE OPENER TO TN PEOPLE. I AM REALLY SADDENED WHY NOT SOME BODY MOVE AN PIL AGAINST THE STATE GOVT IN SUPREME COURT. REAL DEMOCRACY IS NOT A JOKE. WE WERE GIVEN DEMOCRACY AND FREEDON BY BRITISHERS HOWEVER CONDUCTING ELECTION IS NOT A DEMOCRACY, FREEDOM OF SPEECH, POLITICIANS TAKING ADVERSE COMMENTS IS ALSO IMPORTANT. I THINK IF MORE YOUNGER GENERATION COMES INTO POLITICS IN NEXT FIVE YEARS INDIA WILL CHANGE A LOT. PARTICULARLY YOUTH SHOULD BE GIVEN MORE ROLE. MONEY PLAY IN ELECTION SHOULD GO AWAY.

By padmam
5/25/2009 9:48:00 AM

It is really sad that a State Government who has to safe-guard interests of citizens is functioning in devious ways to divert attention from its failure to provide honourabe living to its people. Chattisgarh was the place where Shankar Guha Neogi, a popular leader of the masses who fought for rights of locals by founding Chattisgarh Mukti Morcha, was coolly eliminated in one night. The case prolonged for years together. You are right Sir, in saying point-blank that sometimes ordinary mortals are of no consequence to those who scheme to enjoy power and its fruits eternally.

By ASHWIN
5/25/2009 8:45:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக