கண் தானம் அளிப்போர் எண்ணிக்கை...அதிகரிக்க வேண்டும்! நங்கநல்லூர், சவுகார்பேட்டை மிகுதி
சென்னை:சென்னையின் மக்கள் தொகைக்கு ஏற்ப கண் தானம் இல்லை என்றும்,
விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என்றும், கண் மருத்துவர்கள்
தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், நங்கநல்லூர் மற்றும்
சவுகார்பேட்டை பகுதிவாசிகள் கண் தானத்திற்கு அதிகளவில்
முன்வருவதாக தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை, தேசிய கண்தான விழிப்புணர்வு இருவாரங்களாக அனுசரிக்கப் படுகிறது. கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில்
ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
சென்னையில் தினமும், சராசரியாக 156 பேர் இறப்பதாக, கடந்த ஜூலை மாத மாநகராட்சி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஒவ்வொரு மாதமும், ஏறத்தாழ 4,680 பேர் இறக்கின்றனர். ஆனால், அதற்கு ஏற்ப கண் தானங்கள் கிடைப்பதில்லை என,சங்கரநேத்ராலயா கண் வங்கி ஆலோசகர்கள் விக்ரம் மற்றும் சுப்பிரமணியம் தெரிவித்தனர்.
பேருக்கு உதவும்
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
கண் தானத்தில், தேசிய அளவிலான கணக்கெடுப்பின் படி, தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தேசிய பார்வையிழப்பு கட்டுப்பாட்டு திட்ட தகவல் படி, 2012 13ம் ஆண்டு மே மாதம், தமிழகத்தில் தானமாக பெறப்பட்ட கண்களின் எண்ணிக்கை 8,318. அதற்கு அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் 8,066 கண்கள் தானம் பெறப்பட்டு உள்ளன. 7,153 கண்களை தானமளித்து ஆந்திரா மூன்றாமிடத்தில் உள்ளது.
அதேநேரம், கண் தான விழிப்புணர்வில் சென்னை பின்தங்கித் தான் உள்ளது.
சென்னையில் மாதத்திற்கு 4,680 பேர் இறக்கின்றனர். ஆனால், 50க்கும் குறைவானவர்களுடைய கண்கள் மட்டுமே தானமாக கிடைக்கின்றன.
சவுகார்பேட்டை மற்றும் நங்கநல்லுார் பகுதிவாசிகளுக்கு கண்தான விழிப்புணர்வு அதிகளவில் உள்ளது. அந்த பகுதிகளில் இருந்து, ஒரு மாதத்திற்கு ஓரிருவராவது கண் தானம் அளிக்கின்றனர். அவர்களிலும், வடமாநிலத்தவர்கள் மத்தியில் கண்தான விழிப்புணர்வு நிறையவே உள்ளது.
இறந்தவரின் உறவினர்களுடன் பேசி, கண் தானம் பெற முயற்சிகள் மேற்கொள்வோம். ஒருவரின் இறப்பு அவருடைய குடும்பத்திற்கு பேரிழப்பு தான். ஆனால் அவரது கண்கள் தானமாக தரப்படும் பட்சத்தில், இருண்ட உலகில் தவிக்கும் நான்கு பேருக்கு ஒளி ஏற்றிய பெருமை கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கண் தானம் கொடுப்பது எப்படி?
ஒருவர் இறந்து ஆறு மணி நேரம் வரை கண்களை தானமாக கொடுக்கலாம்.
தற்கொலை தவிர்த்து விபத்து உள்ளிட்ட மற்ற சாதாரண மரணங்கள் எங்கு நடந்தாலும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தகவல் அளிக்கலாம் அல்லது ‘1919’ என்ற தொலைபேசி எண்ணிலும் தகவல் அளிக்கலாம்
தொழில்நுட்ப முன்னேற்றங்களால், தற்போது, ஒருவர் கண்தானமளித்தால் நான்கு பேருக்கு பார்வை கிடைக்கும்
ரத்த அழுத்த நோய் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கண்ணாடி அணிந்தவர்களும் கண் தானம் செய்யலாம்
பிறந்த குழந்தை முதல் 100 வயது வரையிலானவர்களின் கண்களும் பயன்படும்
இறந்தவர், ரத்தம் மற்றும் மூளை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, காசநோய், மலேரியா, மஞ்சள் காமாலை மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டு இறந்திருந்தாலோ கண் தானம் அளிக்க முடியாது
தற்கொலை செய்பவர் எந்த நேரத்தில் இறந்தார் என்பதை சரியாக கணிக்க முடியாது என்பதால் அவருடைய கண்களை பயன்
படுத்த முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக