புதன், 11 செப்டம்பர், 2013

மூலிகைச் செடி வளர்க்கும் இத்தாலிப் பெண்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_80046620130910232100.jpg
மூலிகை ச் செடி வளர்க்கும் இத்தாலி ப் பெண்!

குற்றாலத்தில், 400 வகையான மூலிகை ச் செடிகளை வளர்த்து, பராமரித்து வரும் இத்தாலி நாட்டை சேர்ந்த, மரிய பிரியா மேகி: இத்தாலி நாட்டில் உள்ள, வரிஸி நகரம் தான், என் சொந்த ஊர். அடிப்படையில், நான் ஒரு தாவரவியலாளர். அதனால், குற்றாலத்தில் உள்ள மூலிகை வளங்களும், அதன் பயன்பாடுகளும் என்னை வெகுவாக கவர்ந்தன. அதனால், இத்தாலியை சேர்ந்தவளாக இருந்தும், என்.ஆர்., உரிமம் பெற்று கடந்த, 20 ஆண்டுகளாக குற்றாலத்தில் வசித்து வருகிறேன். இங்கு குடியேறிய ஆரம்பத்தில், குற்றால மலையில் விளையக்கூடிய மூலிகை செடிகளை சேகரித்து, ஒரு மூலிகை தோட்டம் அமைக்க விரும்பினேன். ஏனெனில், குற்றால மலையில், 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. அதனால், ஐந்து ஆண்டுகளாக முயற்சித்து, 2 ஏக்கர் நிலப்பரப்பில், என் விருப்பப்படியே மூலிகை தோட்டம் அமைத்து, அந்த அழகிய சூழலிலேயே வீடு கட்டி வசிக்கிறேன். இம்மூலிகை தோட்டத்தில் கொழிஞ்சி, ஊமத்தை, கண்டங்கத்திரி, சிற்றகத்தி, முடைக்கற்றான், வில்வம், ஆடாதொடை, நொச்சி, நோணி, பிரண்டை என, 400க்கும் மேற்பட்ட மூலிகைகளை வளர்க்கிறேன். இவற்றால் பல பயன்கள் உள்ளன. குறிப்பாக, பிரசவிக்க கஷ்டப்படும் பெண்ணின் அடிவயிற்றில், முடைக்கற்றான் இலையை அரைத்துப் பூசினால், சுகப்பிரசவம் ஏற்படும். வெண்நுணா மரத்தின் பழங்களில், அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும், 150 வகையான உயிர்சத்துக்கள் உள்ளன. அழு கண்ணி செடியின் இலைகளை, வெட்டுக்காயம் ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டினால், வெட்டுப்பட்ட இடம் ஒன்று சேர்ந்துவிடும். குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி குழந்தை களுக்கு, இம்மூலிகை தோட்டத்தை இலவசமாக சுற்றி பார்க்க அனுமதிக்கிறேன். மேலும், மூலிகை செடி தேவைப்படு வோருக்கு, இலவசமாகவே அவற்றை வழங்கு கிறேன். இதற்கு முன், தென் அமெரிக்கா, நேபாளம் போன்ற நாடுகளில், மூலிகை பண்ணை அமைத்துள்ளேன். கடந்த, 15 ஆண்டுகளாக இந்த மூலிகை தோட்டத்தை பராமரித்து வருகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக