மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்: கருணாநிதி
மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிக்க
வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாகத் தமிழை அங்கீகாரம் செய்ய வேண்டும்
என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் கூறியுள்ளார்.இது
மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாகும்.தருண் விஜய் பேசியதைத்
தொலைக்காட்சியில் பார்த்தவுடன், அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்குமாறு
திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்திடம் கூறினேன்.
இந்த வேளையில், மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழை ஏற்க
வேண்டும் என்று திமுக நீண்ட ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதையும்
சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.2011-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது திமுக
சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும் இதனை
வலியுறுத்தியிருந்தோம்.கச்சத்தீவு பிரச்னையில் தமிழக அரசு சுணக்கம்
காட்டாமல் ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் கூறியுள்ள ஆதாரங்களையும்,
தமிழக அரசிடம் உள்ள ஆதாரங்களையும் திரட்டி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க
வேண்டும்.
இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான மண்டபங்களில் நாத்திகர்கள்
நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு தரக்கூடாது என்று அரசு சார்பில் சுற்றிக்கை
விடப்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி உண்மையானால்
கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.
பா.ச. தலைவருக்கு க் கருணாநிதி பாராட்டு
சென்னை:"தமிழ் மொழியை, நாட்டின், இரண்டாவது ஆட்சி மொழியாக, அங்கீகாரம்
செய்ய வேண்டும்' என, பா.ஜ., செய்தி தொடர்பாளர் தருண்விஜய் பேசியதற்கு,
தி.மு.க., தலைவர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:பா.ஜ., செய்தி தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தருண்விஜய், "தமிழ் மொழியை நாட்டின், இரண்டாவது ஆட்சி மொழியாக, அங்கீகாரம் செய்ய வேண்டும்' என, கூறியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. வட மாநிலங்களின் நண்பர்கள், தங்களுக்கு உரித்தான உயர் மனப்பான்மை காரணமாக, பழமை வாய்ந்த, புகழ் பெற்ற தமிழ்மொழியின் ஆழத்தை இன்னும் உணரவில்லை. வட மாநிலங்களிலுள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தமிழ் மொழியை பரப்புவதற்காக, சிறப்புத் திட்டம் ஒன்றை, மத்திய அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும்.
நாட்டின் மறுமலர்ச்சிக்கும், புதிய கலாசார மாற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும், தமிழ்மொழிக்குரிய மரியாதையையும், தகுதியையும் அளித்துள்ளோமா என்பதை சிந்திக்க வேண்டும், என,, தருண்விஜய் பேசியிருப்பது, தமிழ் உணர்வுள்ள அனைவருக்கும் பெருமிதம் தருகிறது. தருண்விஜய் பேசியதை, "டிவி'யில் பார்த்ததும், அவருக்கு பாராட்டு தெரிவிக்குமாறு கே.பி.ராமலிங்கத்திடம் கூறினேன். தருண்விஜயின் உணர்வுகளைப் பாராட்டி, நன்றி செலுத்துகிற அதே வேளையில், தமிழ்மொழியை, மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்க வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக