செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இலங்கையில் சந்தித்தவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_799786.jpg

இலங்கையில் என்னை ச் சந்தித்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்
கொழும்பு : ""இலங்கையில் என்னை சந்தித்த பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்,'' என, ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டை, 2009ல் முடிவுக்கு வந்தது. இந்த சண்டையில், போர் குற்றம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே, ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கையில் போர் பாதித்த பகுதிகளில் நடக்கும், சீரமைப்பு நடவடிக்கைகளை, கடந்த மாதம், ஆய்வு செய்தார்; இந்நிலையில், ஐ.நா., மனித உரிமை ஆணையத்தின், 24வது கூட்டம், ஜெனிவாவில் நேற்று துவங்கியது. வரும், 27ம் தேதி வரை, இந்த கூட்டம் நடக்க உள்ளது. இலங்கை உள்ளிட்ட, 20 நாடுகளின், மனித உரிமை நிலை குறித்த அறிக்கை, இந்த கூட்டத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.இலங்கை பயணம் மேற்கொண்ட, நவநீதம் பிள்ளை, அந்நாட்டின் மனித உரிமை நிலை குறித்த அறிக்கையை, இம்மாத இறுதியில் தாக்கல் செய்ய உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:இலங்கையில் போர் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய, இலங்கை அரசு உதவி செய்தது. இது தொடர்பான அறிக்கையை, கூட்டத்தின் முடிவில் சமர்ப்பிக்க உள்ளேன். இலங்கை பயணத்தின் போது, என்னை சந்தித்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.இவ்வாறு, நவநீதம் பிள்ளை கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக