மூத்த இதழாளர் பாரதமணி சீனிவாசன் காலமானார்
சுதந்திரப் போராட்ட வீரரும், பாரதமணி மாத இதழின் ஆசிரியருமான பி.என். சீனிவாசன் (85) சென்னையில் சனிக்கிழமை (செப். 7) காலமானார்.
ரயில்வே பணியை ராஜிநாமா செய்துவிட்டு 1987-ஆம் ஆண்டு காந்திய தரிசன
கேந்திரம் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, காந்திய சிந்தனைகளைப் பரப்பும்
பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
எழுத்தாளர் கா.சீ.வேங்கடரமணி தொடங்கிய பாரதமணி பத்திரிகையை இவர் தொடர்ந்து நடத்தி வந்தார்.
சென்னை மாநிலக் கல்லூரிக்கு எதிரே மெரினா கடற்கரையில் உள்ள திடலுக்கு
திலகர் கட்டம் என்ற பெயரை மீண்டும் வைக்கக்கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்று
போராடினார்.
அதன் விளைவாக கடந்த 2010-ஆம் ஆண்டு திலகர் கட்டம் என்ற பெயர்
சூட்டப்பட்டு பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. இளைஞர்களை ஆண்டுதோறும்
மகாத்மா காந்தி தொடர்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக்
கொண்டிருந்தார். இதன் மூலம் இளைஞர்களுக்கு காந்தியின் மகத்துவத்தை உணரச்
செய்தார்.
மறைந்த சீனிவாசனுக்கு மனைவி, இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். அவரது
உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகில் உள்ள
பொன்விளைந்த களத்தூர் கிராமத்தில் சனிக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.
தொடர்புக்கு: 94440 10394.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக