திங்கள், 9 செப்டம்பர், 2013

தெலங்கானா ஆதரவுமடல்: திரும்பப் பெற்றது ஒய்எசுஆர் காங்கிரசு

தெலங்கானா ஆதரவுமடல்: திரும்பப் பெற்றது ஒய்எசுஆர் காங்கிரசு

தெலங்கானா தனி மாநிலம் அமைக்க ஆதரவு தெரிவித்து மத்திய அரசிடம் கொடுத்த கடிதத்தை வாபஸ் பெறுவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது ஆந்திர அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷர்மிளா, சீமாந்திரா பிராந்தியத்தில் பஸ் யாத்திரை செல்ல முடியாமல் தடுக்கப்பட்ட ஓரிரு தினங்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அக்கட்சியின் கெüரவத் தலைவர் விஜயாம்மா மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா உருவாக்கும் முடிவை தனது கட்சி இப்போது ஆதரிக்கவில்லை. ஆந்திரத்தை ஒரே மாநிலமாக வைத்திருப்பதையே விரும்புகிறோம் என்று அந்தக் கடிதத்தில் விஜயாம்மா தெரிவித்துள்ளார். கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
ந்திரத்தில் உள்ள 60 சதவிகித மக்கள் மாநிலத்தைப் பிரிப்பதை எதிர்க்கிறார்கள். இதற்காக சீமாந்திராவில் பல நாள்களாக பந்த் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பஸ்கள் ஓடவில்லை. கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. 13 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
10 மாவட்டங்கள் கொண்ட தெலங்கானாவில் உள்ளவர்களும், 13 மாவட்டங்கள் கொண்ட சீமாந்திரா பிராந்திய மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
ஆந்திரத்தின் 2 பிராந்திய மக்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று கருதுகிறோம். சீமாந்திரா பிராந்திய மக்களின் கவலைகளை மத்திய அரசுக்கு எடுத்துரைக்க பலவாறு முயன்றும் மத்திய அரசு எங்கள் குரலுக்கு செவிசாய்க்கவில்லை. ஆந்திரத்தை பிரிப்பதை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், மஜ்லிஸ் கட்சி, மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை எதிர்க்கின்றன என்று கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக