கொள்ளையன் என க் கருதி இராணி எலிசபெத் 2– ஆவது மகன் இளவரசர் ஆண்ட்ரூ கைது
பதிவு செய்த நாள் :
திங்கட்கிழமை,
செப்டம்பர் 09,
12:16 PM IST
இலண்டன், செப்.9–
இங்கிலாந்து ராணி
எலிசபெத்தின் 2–வது மகன் இளவரசர் ஆண்ட்ரூ (32). இவர் எலிசபெத்தின் 3–வது
குழந்தை ஆவார். சம்பவத்தன்று காலை பக்கிங்காம் அரண்மனையின் தோட்டத்தில்
‘வாக்கிங்’ சென்றார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த லண்டன் மெட்ரோ பாலிட்டன் போலீசார் அவரை துப்பாக்கி முனையில் திடீரென கைது செய்தனர்.
இதனால்
சுமார் அரை நிமிடம் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இளவரசர்
ஆண்ட்ரூவுக்கு ஒன்றும் புரியவில்லை. எனவே, அவரும் சிறிது நேரம் தடுமாற்றம்
அடைந்தார்.
இதற்கிடையே, துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரை சுட
முயன்றபோது அரண்மனை காவலர்கள் ஓடிவந்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
மேலும் இவர் இளவரசர் ஆண்ட்ரூ என்று விளக்கினர்.
இதனால் துப்பாக்கி
சூட்டில் இருந்து அவர் தப்பினார். அதை தொடர்ந்து இச்சம்பவத்துக்கு லண்டன்
மெட்ரோபாலிட்டன் போலீசார் இளவரசர் ஆண்ட்ரூவிடம் மன்னிப்பு கேட்டனர்.
சில
நாட்களுக்கு முன்பு பக்கிங்காம் அரண்மனைக்குள் கொள்ளையர்கள் புகுந்தனர்.
அவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், ‘வாக்கிங்’ சென்ற
இளவரசர் ஆண்ட்ரூவை கொள்ளையன் என தவறுதலாக நினைத்து போலீசார் கைது
செய்துள்ளனர்.
மேலும், அவரை சுட்டுக் கொல்ல முயன்றுள்ளனர். இந்த
விளக்கம் போலீஸ் தரப்பிலும், பக்கிங்காம் அரண்மனை தரப்பிலும்
வெளியிடப்பட்டது. இச்சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக