வியாழன், 12 செப்டம்பர், 2013

இலங்கைக்குப் போர்க் கப்பல்களை இந்தியா வழங்கக்கூடாது: வாசன் எதிர்ப்பு

இலங்கைக்கு ப் போர்க் கப்பல்களை இந்தியா வழங்கக்கூடாது: மத்திய அமைச்சர் வாசன் எதிர்ப்பு





இலங்கைக்கு போர்க் கப்பல்களை, இந்தியா வழங்கக்கூடாது என மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
ஈரோட்டில் காங்கிரஸ் பிரமுகர்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை இரவு அளித்த பேட்டி:
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது பற்றிய தமிழக மக்களின் உண்மையான உணர்வுகளை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே ஆகியோரிடம் விளக்கமாக கூறி உள்ளேன்.
 இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் பிரச்சினை ஆகியவற்றுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் வரை இலங்கை அரசுக்கு இந்திய போர்க் கப்பல்கள் வழங்குவது போன்ற கொள்கை முடிவுகளை தள்ளி வைக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உணர்வுகள் நியாயமானது என்று பிரதமரிடம் எடுத்து கூறுவேன் என்றார்.
பேட்டியின்போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், முன்னாள் எம். எல்.ஏ.க்கள் ஆர்.எம்.பழனிச்சாமி, விடியல் எஸ்.சேகர், இளைஞர் காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் எம்.யுவராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக