தற்கொலையை முன்னரே கண்டுபிடிக்கலாம்!
தற்கொலை எண்ணம் உள்ளவர்களை, ரத்த பரிசோதனை மூலம், முன்னரே கண்டுபிடிக்கும், மனநல மருத்துவர், அலெக்சாண்டர் நிகுளசுகு: நான், அமெரிக்க நாட்டின், "இண்டியானா பல்கலைகழக ஸ்கூல் ஆப் மெடிசினி'ல், மருத்துவ ஆராய்ச்சியாளராக, பணியாற்றுகிறேன். மனநோயை கண்டுபிடிப்பது, மிகவும் கஷ்டம். "கைலாஜிக்கல் பிராப்ளம்' எனும் மனப் பிரச்னைகளை, வெளியில் சொல்ல முடியாமல், பல நேரங்களில் சொல்லத் தெரியாமல் தவிக்கின்றனர். இப்பிரச்னை குறித்த எந்த அறிகுறியும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரிவதில்லை. "பயோ மார்க்கர்ஸ்' என்பது, ரத்தத்தில் இருக்கும் மரபியல் கூறுகள். இவை, மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை, உடல் அறிகுறிகளாக வெளிப்படுத்துகின்றன. பயோ மார்க்கர்ஸ் குறித்து, 10 ஆண்டுகளாக, ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதிக உணர்ச்சிப்படுதல், அதிக சோகம் என்ற, இருவேறு மனநிலை பாதிப்புள்ள, "பைபோலார் டிஸ்ஆர்டர்' உள்ள, 75 நபர்களிடம் ஆராய்ச்சி மேற்கொண்டேன். இந்த ஆராய்ச்சியில், தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கும் போது, அவர்களின் ரத்தத்தில், "சாட்1' என்ற ஒருவித புரதம் அதிகம் காணப்பட்டது. அதுபோல், இருவேறு மனநிலை பாதிப்பால், தற்கொலை செய்தவர்களின் ரத்தத்தை பரிசோதித்ததில், அதிலும், சாட்1 புரதம் அதிக அளவில் காணப்பட்டதை கண்டறிந்தேன். தற்கொலையில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும், பைபோலார் பாதித்த, 42 ஆண்களுடன், "சீஷோபிரீனியா' பாதித்த, 46 பேருடன் ரத்த மாதிரியை ஒப்பிட்டேன். அதில், நான்கு மரபியல் கூறுகள் உடனடி அபாயத்தை தூண்டும் நிலையிலும், மற்றவை எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதையும், ஆதாரத்துடன் நிரூபித்தேன். நான் கண்டறிந்த ரத்த பரிசோதனை மூலம், 79 சதவீதம் மனநோய் பாதிப்பையும், 65 முதல், 83 சதவீதம், தற்கொலை எண்ணம் வருவதற்கான வாய்ப்பையும், துல்லியமாக கண்டறியலாம். இந்த ஆராய்ச்சி கட்டுரை, "மாலிகுலார் சைக்கியாட்ரி' என்ற மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக