வெள்ளி, 13 செப்டம்பர், 2013

தமிழறிஞர் சி.இலக்குவனார் நினைவேந்தல் - திருவாரூர்




திருவாரூரில் 08.09.13 ஞாயிறு அன்று  மாலை சிவம் நகர் நுகர்வோர் மன்றத்தில் தமிழ்க்காப்புக்கழகமும் படைப்பாளர் கூட்டமைப்பும் இணைந்து தமிழறிஞர் சி.இலக்குவனார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தின.
தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் மனிதநேயப் பேரவை நிறுவனர் திரு இராச.நீதிதாசன் வரவேற்புரை ஆற்றினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சிறப்பு அலுவலர் முனைவர் த.அண்ணாதுரை முன்னிலையுரை ஆற்றினார்.
மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரி முதல்வர் பேரா. முனைவர் பிறை அறிவழகன்  பேராசிரியரின் படத்தைத் திறந்து வைத்து, “இலக்கிய வரலாற்றில் இலக்குவனார் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிப் பேராசிரியரின் முன்னோடித் தமிழ்ப்பணிகளையும் தமிழ்ப்போராளியாய் வாழ்ந்து தமிழ் காத்தமையையும் குறித்து விளக்கினார்.
படைப்பாளர் கூட்டமைப்பின்  சார்பில் கடம்பை அறிவு  நன்றி நவின்றார்.
 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக