திங்கள், 9 செப்டம்பர், 2013

குப்பைக் கிடங்கைப் பூங்காவாக மாற்றினேன்!


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_798913.jpg
குப்பை க் கிடங்கை ப் பூங்காவாக மாற்றினேன்!

திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம், குப்பை க் கிடங்கை உரப்பூங்காவாக மாற்றி, காய்கறி த் தோட்டம் அமைத்த, கலையரசி: நான், மதுரை மாவட்டம், பேரையூர் பேரூராட்சியின், செயல் அலுவலராக பணியாற்றி வருகிறேன். எங்கள் பேரூராட்சியில், 3,450 வீடுகள், 650 வணிக நிறுவனங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு, 1 டன் குப்பையை சேகரித்து அப்புறப்படுத்துவது, சவாலான செயலாக இருந்தது. அச்சமயத்தில் தான், தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, பேரையூர் பேரூராட்சியில் செயல்படுத்த, உதவியும் செய்தது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக, புதர் மண்டிய, குப்பை கூளமாக காட்சியளித்த, 1.15 ஏக்கர் நிலத்தை தேர்ந்தெடுத்து, 3.6 லட்சம் செலவில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும், "உரப்பூங்கா' அமைத்தோம்.எதற்குமே பயன்படாது என, கூறப்பட்ட அவ்விடத்தை, துப்புரவு பணியாளர்கள் மூலம், சுத்தப்படுத்தி சீராக்கினோம். பின், மக்கும் மற்றும் மக்காத குப்பை என, இரண்டாக பிரித்து, அவற்றிலிருந்து, மண்புழு உரம், கலவை உரம் தயாரித்தோம். இந்த உரங்களை, கிலோ ஒன்றுக்கு, 5 ரூபாய் என, குறைந்த விலைக்கு விற்று, பேரூராட்சிக்கு வருமானத்தையும் ஈட்டித் தருகிறோம். மீதியுள்ள இடத்தை வீணாக்காமல், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள், 10 பேரை வேலைக்கு அமர்த்தி, காய்கறி தோட்டம் அமைத்தோம். இது, குறுகிய காலத்திலேயே பயன்தர ஆரம்பித்தது. இயற்கை உரங்களை பயன்படுத்தி, அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் என்பதாலும், குறைந்த விலைக்கே விற்கப்படுவதாலும், உள்ளூர் மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. தற்போது, வெண்டை, வெள்ளரி, கீரைகள், தக்காளி போன்ற காய்கறிகளும், தேக்கு, செம்மரம் போன்ற, பயன் தரும் மரங்களும் வளர்க்கிறோம். மக்காத பிளாஸ்டிக் குப்பை தனியாக பிரிக்கப்பட்டு, "பிளாஸ்டிக் ரோடு' போட பயன்படுத்தப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால், குப்பைகளற்ற சுகாதாரமான பேரூராட்சியாக பேரையூர் திகழ்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக