திருப்பூர்: ஒரே டம்ளரில், மூன்று வித தேநீரை தயாரித்து, அனைவரையும்
ஆச்சரியப்பட வைக்கிறார், திருப்பூரில் உள்ள டீ மாஸ்டர் ஒருவர். டீ
அருந்துவதில், பலருக்கும், பல ரசனைகள் உள்ளன. பால் கலக்காத பிளாக் டீ,
கிரீன் டீ, லெமன் டீ, ஐஸ் டீ என, பல ருசிகளில் டீ
தயாரிக்கப்படுகிறது.கடைகளில் டீ அருந்தும்போது பிளாக் டீ, பால் டீ, லைட்
டீ, ஸ்ட்ராங் டீ; இதிலும் சர்க்கரை அதிகம், குறைவு, மீடியம், சர்க்கரை
இல்லாமல் என, ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்துக்கேற்ப டீ
பருகுகின்றனர்.திருப்பூர் பேக்கரி ஒன்றில் பணியாற்றும் டீ மாஸ்டர் பாலு,
எதற்கும் அசரும் ஆள் இல்லை. ஒரே டம்ளரில் பிளாக் டீ, பால் டீ மற்றும் டீ என
மூன்று வகைகளையும், ஒன்றோடொன்று கலக்காமல் போட்டு, வாடிக்கையாளர்களை
வியப்பில் ஆழ்த்துகிறார். தஞ்சாவூரை சேர்ந்த, 24 வயதான பாலு, எட்டு
ஆண்டுகளாக, திருப்பூரில் டீ மாஸ்டராக உள்ளார். சிறு வயது முதலே,
டீக்கடையில் பணியாற்றி வரும் இவர், ஆர்வத்தில், மூன்று ரக டீயையும், ஒரே
டம்ளரில் போட்டு பழகியுள்ளார். அதைக் காணவும், ருசிக்கவும், கடையிலும்
கூட்டம் மொய்க்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக