வியாழன், 15 நவம்பர், 2012

ஆழ்மயக்க நிலையில் செயல்படும் மூளை

ஆழ்மயக்க(கோமா) நிலையில் இருந்தாலும் சிந்தித்து ச் செயல்படும் மூளை: மருத்துவ விஞ்ஞானி தகவல்
கோமா நிலையில் இருந்தாலும் சிந்தித்து செயல்படும் மூளை: மருத்துவ விஞ்ஞானி தகவல்
இலண்டன்,நவ.16-

கோமா நிலையில் இருக்கும்போதும், மயங்கிய நிலையில் உடல் செயலற்று இருக்கும் போதும் மூளை சிந்தித்து செயல்டும் திறனை இழந்து விடும் என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது.

ஆனால் அந்த நிலையிலும் மூளை சிந்தித்து செயல்படுவதாக மருத்துவ விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்து உள்ளார். கனடா நாட்டை சேர்ந்த ஸ்காட்ரட்லி என்பவர் விபத்தில் சிக்கி 12 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்தார். அவர் அவ்வப்போது கண் திறந்தும், கைகளை அசைத்தும் ஏதோ சொல்ல முயற்சிப்பதாகவும் அவரை கவனித்து வந்த உறவினர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி அறிந்த இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர் அட்ரியன் ஓவன் அவரை ஆய்வு செய்தார். ஸ்காட்ரட்லியிடம் அவர் சில கேள்விகளை கேட்டு அதை நவீன ஸ்கேன் மூலம் பிரிசோதித்தார். அதில் அவர் கேட்கும், ஒவ்வொரு கேள்விக்கும் ஸ்காட்ரட்லி பதில் அளிப்பது ஸ்கேனில் பதிவாகி இருந்தது.

உங்களுக்கு உடல் வலிக்கிறதா? தற்போது கொடுக்கும் சாப்பாடு பிடிக்கிறதா? போன்ற கேள்விக்கு மூளை சிந்தித்து பதில் அளித்தது. மேலும் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களையும், இருக்கும் சூழ்நிலைகளையும் மூளை புரிந்து கொண்டது.

இதேபோல கனடா நாட்டை சேர்ந்த ஸ்டீவன் கிரகாம் என்பவர் பல ஆண்டுகளாக கோமாவில் இருந்தார். அவரை பரிசோதித்த போதும் மூளை சிந்தித்து பதில் அளித்தது. இதன் மூலம் கோமா நிலையில் இருந்தாலும் மூளை தனது அனைத்து பணிகளையும் செய்வதாக அட்ரியன் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக