வியாழன், 15 நவம்பர், 2012

ஐ.நா. பொதுச்செயலாளரை விசாரிக்க வேண்டும்: வைகோ


இலங்கை த் தமிழர் படுகொலையை த் தடுக்க த் தவறிய ஐ.நா. பொதுச்செயலாளரை விசாரிக்க வேண்டும்: வைகோ அறிக்கை
இலங்கை தமிழர் படுகொலையை தடுக்க தவறிய ஐ.நா. பொதுச்செயலாளரை விசாரிக்க வேண்டும்: வைகோ அறிக்கை
சென்னை, நவ. 15-

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்க மின்றி கோரமாகப் படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசுக்கு முப்படை ஆயுதங்களையும், வழங்கி மற்ற வல்லரசுகளிடம் ஆயுதம் வாங்குவதற்கு சிங்கள அரசுக்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்களைத் தந்தும், தமிழ் இன அழிப்பு  யுத்தத்தை நடத்திய இந்திய அரசு, தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளியாகும்.

இலங்கைத் தீவில் ஐ.நா. மன்றத்தின் நடவடிக்கைகளை உள் ஆய்வு செய்த அதிகாரி சார்லஸ் பெட்ரி இறுதியாக ஐ.நா.வுக்கு தந்த அறிக்கையில் முக்கியமான 30 பக்கங்கள் நீக்கப்பட்டதாக வந்த செய்தி அதிர்ச்சி தருகிறது. அந்த அறிக்கையிலேயே 1 லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கோரமாகப் படு கொலை செய்யப்பட்டனர் என்ற தகவலை ஊன்றி படித்தால் அறியலாம்.

ஆனால் உண்மையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். நெஞ்சை நடுங்க வைக்கும் ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்த உண்மைகள் ஓரளவு வெளிவந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் இலங் கைக்குப்  பொருளாதார தடை விதித்த போது சிங்கள அதிபர்    ராஜபக்சேவை இந்தியாவுக்கு இருமுறை அழைத்து வந்து வரவேற்பு கொடுத்து உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவ முயன்றது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.

எனவே சிங்களவர் நடத்திய இனக்கொலையைத் தடுக்க தவறிய  ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட கற்பனை செய்ய முடியாத கொடுந்துயரம் குறித்து முழு உண்மையைக் கண்டறியவும், இன கொலை புரிந்த ராஜபக்சே கூட்டத் தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றக்கூண்டில் நிறுத்தவும் ஒரு விசாரணை குழுவை அமைக்க அனைத்து நாடுகள் முன்வரவேண்டும்.

இந்த நிலையை உருவாக்க உலகெங்கும் உள்ள ஈழத் தமிழ் சகோதரர்களும், தமிழ் இன உணர்வாளர்களும், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் குரல் எழுப்ப வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக