புதன், 14 நவம்பர், 2012

அயல்நாட்டு முதலீடு பற்றிக் (குடும்பத்தினருடன்?)கலந்துபேசி முடிவெடுப்போம் : கலைஞர்

அன்னிய முதலீடு பற்றி ஆலோசித்து முடிவெடுப்போம் : கருணாநிதி

(ுடினரனே!  தெிமே!)

First Published : 14 November 2012 02:27 PM IST
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து வியாபாரிகளின் நலனை முன்வைத்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள், அன்னிய நேரடி முதலீடு பிரச்சினையை முன் வைத்து இடதுசாரிக் கட்சிகளும், வேறு சில கட்சிகளும் இணைந்து தீர்மானம் கொண்டு வந்து, அதன் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்களே, அந்தக் கோரிக்கையை தி.மு.க. வும் சேர்ந்து ஆதரிக்குமா? என்று கேட்டதற்கு, கருணாநிதி, "அன்னிய நேரடி முதலீடுகளைப் பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் தனது பாராளுமன்றக் கட்சி உறுப்பினர்களையெல்லாம் அழைத்து கலந்து பேசி, கழகத்தின் சார்பில் எங்கள் கருத்துக்களைத் தெரிவிப்போம் என்று கூறினார்.
இதிலே “சஸ்பென்ஸ்” ஆக சொல்கிறீர்கள். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், தி.மு.க. அதை ஆதரிக்குமா? மாற்றம் இருக்குமா? “சஸ்பென்ஸ்” ஆக என்ன காரணத்தால் சொல்கிறீர்கள்? என்று செய்தியாளர் கேட்டதற்கு, நான் நூறு திரைப்படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியிருக்கிறேன். அந்தப் படங்களில் “சஸ்பென்ஸ்” இருந்தால் தான், அந்தப் படம் நன்றாக ஓடும் என்று பதிலளித்தார்.
செய்தியாளர், அன்னிய நேரடி முதலீடு சிறு வியாபாரிகளைப் பெரிதும் பாதிக்கும் என்று சொல்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் நீங்கள் தெளிவான முடிவைச் சொல்ல வேண்டும். அதிலே ஏன் சஸ்பென்ஸ்? என்று கேள்வி எழுப்பியதற்கு, தமிழ்நாட்டிலே உள்ள சில்லரை வியாபாரிகளும், நடுத்தர வியாபாரிகளும் அன்னிய நேரடி முதலீடு தங்களைப் பெரிதும் பாதிக்கும் என்று சொல்லுகிறார்கள். அவர்களின் நலன்களை முன் வைத்துத் தான் இதைப் பற்றி நாங்கள் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று கருணாநிதி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக