வியாழன், 15 நவம்பர், 2012

இலங்கை மனித உரிமை மீறல்கள்: தனிக்குழு அமைப்பு: பான்கீமூன்

இலங்கை மனித உரிமை மீறல்கள்:
 தனிக்குழு அமைப்பு: பான்கீமூன்
(தை றை்கம் மா?)
ஐ.நா. : இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது ஐ.நா. உள்அறிக்கையில் அம்பலத்தபடுத்தப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன் தனக்கு ஆலோசனை வழங்கிட குழு ஒன்றினை அமைத்துள்ளார். இலங்கையில் நடந்த இறுதிகட்டப்போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.வின் உள் அறிக்கையில், ஐ.நா. மனித உரிமை மெத்தனமாக செயல்பட்டதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டிருந்தது.

இது குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன், கூறுகையில், இலங்கையில் நடந்த போரின் போது 40 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாயினர். இதனைவ தடுக்க ஐ.நா. மனித உரிமை அமைப்பு தவறியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரங்களில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த விவகாரத்தில் தனக்கு ஆலோசனை வழங்கிட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக