வெள்ளி, 16 நவம்பர், 2012

தொடரிச் சீட்டுகளில் தமிழ் மொழி நீக்கம்: குமரி அனந்தன் போராட்டம் அறிவிப்பு

தொடரிச் சீட்டுகளில் தமிழ் மொழி நீக்கம்: குமரி அனந்தன் போராட்டம் அறிவிப்பு
ரெயில் டிக்கெட்டில் தமிழ் மொழி நீக்கம்: குமரி அனந்தன் போராட்டம் அறிவிப்பு
சென்னை, நவ. 16-
 
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை தலைவருமான குமரிஅனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ரெயில் பயணிகளுக்கு முன்பதிவு படிவத்தில் தமிழ் இருக்க வேண்டும். பயணச் சீட்டில் தமிழ் இருக்க வேண்டும். இப்போது பயணச் சீட்டிலிருந்த தமிழையே ரெயில்வே நிர்வாகம் அகற்றிவிட்டது. தமிழ் மக்கள் பேசாதிருந்தால் இன்னும் தமிழ் பெற வேண்டிய உரிமைகள் பலவிருக்க, ஏற்கனவே போராடிப் பெற்றவைகளையும் இழந்து விடுவோம்.
 
தமிழில் அஞ்சல் அட்டை வேண்டுமென கேட்டு போராடி பெற்றோம். இப்போது தமிழில் உள்ள அஞ்சலட்டை எங்குமே இல்லை. ரெயில் பயணச் சீட்டில் தமிழை எடுத்துவிட்டார்கள். உடனே தமிழில் வந்த உரிமைகளை நிலைநாட்டும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும்.
 
இதற்காக நான் தொண்டாற்றும் காந்தி பேரவை சார்பிலும், தமிழ் ஆர்வலர்கள் சார்பிலும் சென்னை மத்திய ரெயில் நிலையத்தில் மறியல் செய்து சிறை செல்வதற்கான நாள் குறிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக