பீகாரில் திறந்தவெளி ச் சிறையில்
குடும்பத்துடன் தீபாவளி
பக்சார்: பீகார் சிறையிலுள்ள,70 கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன்,
சிறை வளாகத்தில், இன்று தீபாவளி கொண்டாடுகின்றனர்.பீகார் மாநிலத்தில்,
பல்வேறு சிறைகளில் கைதிகளாக உள்ளவர்களில் நன்னடத்தை அடிப்படையில், கைதிகள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், மூவர் மரண தண்டனை கைதிகள்; மற்றவர்கள்
ஆயுள் தண்டனை கைதிகள்.இவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி
கொண்டாடுவதற்காக, பக்சார் நகரில் உள்ள திறந்தவெளி சிறைச் சாலையில் அடைக்கப்
பட்டுள்ளனர். இங்கு, தங்கள் குடும்பத்தினருடன், இன்று தீபாவளியை
கொண்டாடுகின்றனர். இதற்காக, 70 கைதிகளின் குடும்பத்தாரும், பக்சார்
சிறைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.பத்து வயதான பிங்கி, நாளந்தாவில்
இருந்து, பக்சார் வந்துள்ளார். இவரது, தாய் மாமன் மனோஜ் பஸ்வான், கடந்த, 12
ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இது குறித்து பஸ்வான் கூறுகையில், ""சில
சமயங்களில் நான் சிறையில் இருப்பது பற்றி கவலைப்பட்டது கிடையாது. இப்போது,
என் மருமகளுடன் தீபாவளி கொண்டாடப் போவதை எதிர்பார்த்து, மகிழ்ச்சியுடன்
உள்ளேன்,'' என்றார்.இதேபோல், மரண தண்டனை கைதியான, சபிர் அன்சாரியுடன்,
தீபாவளி கொண்டாடுவதற்காக, கோபால்கஞ்ச் நகரிலிருந்து, அவரது பேரன் கோலு
வந்துள்ளான்.பக்சார் திறந்தவெளி சிறைச் சாலை வளாகத்திற்குள், கைதிகள்
தங்கள் குடும்பத்தாருடன் வசிப்பதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், இப்புதிய
திட்டத்தை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். இதற்கு, பல
தரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்தது.பொதுவாக சிறைகளின் காம்பவுன்ட்
சுவர்கள், 14 அடி முதல், 18 அடி வரை இருக்கும். ஆனால், இந்த திறந்தவெளி
சிறைகளின் காம்பவுன்ட் சுவர், நான்கு அடி தான் இருக்கும்.தீபாவளி பண்டிகையை
கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாடுவதற்காக, திறந்தவெளி
சிறையில் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதற்காக அமைக்கப்பட்ட
கமிட்டி, கைதிகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து தேர்வு செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக