வியாழன், 15 நவம்பர், 2012

ஐரோப்பாவில் வேலையில்லா த் திண்டாட்டம்: வேலை நிறுத்தம்

ஐரோப்பாவில் வேலையில்லா த் திண்டாட்டம்: 23 நாடுகளில் வேலை நிறுத்தம்
ஐரோப்பாவில் வேலையில்லா திண்டாட்டம்: 23 நாடுகளில் வேலை நிறுத்தம்
லண்டன், நவ. 15-

ஒரு காலத்தில் செல்வ செழிப்பில் மிதந்த ஐரோப்பிய நாடுகள் இப்போது பொருளாதார சரிவில் சிக்கி தவிக்கின்றன. இதை சரிகட்ட வரி அதிகரிப்பு, வேலை பறிப்பு போன்ற நடவடிக்கைகளில் அந்த நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஏராளமானோர் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள்.

இதை கண்டித்து 23 நாடுகளில் பொது வேலை நிறுத்தம் நடந்தது. 40-க்கும் மேற்பட்ட சங்கங்கள் இதில் பங்கேற்றன. மற்ற நாடுகளில் வேலை நிறுத்தம் அமைதியாக நடந்தது. ஆனால் ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது.

ஸ்பெயினில் மாட்ரிட் நகரில் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. அப்போது போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டனர். இதனால் நூற்றுகணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.

கிரீஸ், ஏதென்ஸ் நாடுகளில் சில இடங்களில் மட்டும் மோதல் சம்பவங்கள் நடந்தன. ஐரோப்பிய நாடுகளிலேயே ஸ்பெயினில்தான் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. அங்கு 25 சதவீதம் பேருக்கவேலை இல்லை. கிரீசில் 23 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். இந்த எண்ணிக்கை பிரான்சில் 14 சதவீதமாகவும், இத்தாலியில் 10 சதவீதமாகவும், பெல்ஜியத்தில் 5 சதவீதமாகவும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக