செவ்வாய், 13 நவம்பர், 2012

துணிவை இழந்த கலைஞரைச் சந்தித்தார் ப.சிதம்பரம்

அப்படி எல்லாம் மிரட்டும் துணிவு கலைஞரிடம் கிடையாது. மத்திய அரசு பொது வாக்கெடுப்பிற்கு உறுதுணையாக இருந்தால் தி.மு.க.வும் அந்தப் பொது வாக்கெடுப்பிற்குத் துணையாக இருக்கும் என அடிமைத்தனத்தைத்தான் வெளிப்படுத்தினார். தலைமை அமைச்சர் விருந்தைப் புறக்கணிதததால அது குறித்துப் பேசி இருக்கலாம். வழக்குகள் குறித்தும் பேசி இருக்கலாம். நீங்கள் பழைய கலைஞர் என எண்ணி ஊகமாகச் செய்தியை வெளியிட  வேண்டா. நாட்டு மக்களைப் பற்றி எண்ணாமல் இன மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வீட்டு மக்களைப்பற்றிக் கவலைப்படும் அவர்களுக்கு அஞ்சும் கலைஞரைப்பற்றி அறிந்தே இவ்வாறு செய்தி வெளியிடுவது வியப்பாக உள்ளது. குடும்பப் பிடியிலிருந்து கலைஞர் விடுபட்டால் அவருக்கும் தி.மு.க.விற்கும் நாட்டிற்கும் இனத்திற்கும் நல்லது. இதனை அறிந்திருந்தாலும் பாசம் கண்களை மறைப்பதால் விடுபட வாய்ப்பில்லை.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மத்திய அரசுக்கு உறுதுணையாக இருக்க விதித்த நிபந்தனை: கருணாநிதியைச்சந்தித்தார் ப.சிதம்பரம்

First Published : 12 November 2012 08:54 PM IST
திமுக தலைவர் கருணாநிதியை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று(திங்கள் கிழமை) மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு திடீரென ஏற்பாடானது என்று கூறப்படுகிறது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு ப.சிதம்பரம் மாலை 5.30 மணி அளவில் வந்தார். கருணாநிதியைச் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பேசியுள்ளார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது, 4 மாதங்களாக அவரைச் சந்திக்கவில்லை என்பதால் தற்போது சந்தித்துப் பேசினேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார் ப.சிதம்பரம்.
இலங்கைப் பிரச்னை விவகாரத்தில், ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடப்பதே தீர்வு, அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் திமுகவும் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கருணாநிதி ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். இது தொடர்பாகவே ப.சிதம்பரம் கருணாநிதியைச் சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக