வெள்ளி, 16 நவம்பர், 2012

போர்க்குற்றம்: இலங்கை மீது பன்னாட்டு விசாரணை வேண்டும்

போர்க்குற்றம்: இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும்

First Published : 16 November 2012 06:11 PM IST
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி மக்களை காக்க ஐ.நா. தவறி விட்டதாக அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், போர்க்குற்றம் குறித்து இலங்கையிடம் சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டணி வியாழக்கிழமை கோரி உள்ளது.
கடந்த 2009 மே மாதம், விடுதலைப் புலிகளுடனான இலங்கை ராணுவத்தின் இறுதிக்கட்டப் போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களை பாதுகாக்கும் கடமையில் ஐ.நா. தோல்வியடைந்து விட்டதாக இலங்கைப் போர் குறித்து ஆய்வு நடத்திய ஐ.நா. நிபுணர்களின் அறிக்கை தெரிவித்தது. இதனை ஐ.நா.வும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில், இலங்கையிடம் போர்க்குற்றம் குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் சுமந்திரன், வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "நிபுணர்களின் ஆய்வறிக்கை வெளிவந்துள்ள நிலையில், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் போர் குறித்து சர்வதேச அளவில் விசாரணை தேவை. இலங்கை அரசே முக்கிய குற்றவாளியாக இருப்பதால், விசாரணையில் அந்நாடு ஈடுபடக்கூடாது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, இழப்பீடு, மறுகுடியமர்வு தேவை. இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்கப்படக்கூடாது என்று ஒருவரும் கூற மாட்டார்கள்' என்றார் சுமந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக