வியாழன், 15 நவம்பர், 2012

(பாவம் நிதி யில்லையாம்! என்ன பெயரில் திரட்டலாம் எனக் கருத்து சொல்லுங்களேன்.)ஆதாயம் பார்க்காமல் உழைப்பவர்கள் தி.மு.க.வின் இரத்த நாளங்கள் - கலைஞர்

இலாபம் பார்க்காமல் உழைப்பவர்கள் தி.மு.க.வின் இரத்த நாளங்கள்: சைதை கிட்டு மகன் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
(இலாபம்தான்  தலைவர் குடும்பத்தில் கொட்டுகிறதே! அந்த நிறை வு போதும் - தொண்டர்களுக்கு!)
 
 
லாபம் பார்க்காமல் உழைப்பவர்கள் தி.மு.க.வின் ரத்த நாளங்கள்: சைதை கிட்டு மகன் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
சென்னை, நவ.15-

முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. சைதை க.கிட்டு மகன் கருணா- தாரிகா திருமணம் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:-

அருமை தம்பி சைதை கிட்டுவின் புகழை, அவர் பெற்ற பெருமையை, அவரது வீரத்தை எல்லாம் எண்ணி எண்ணி அகமகிழ்கின்றேன். மணமக்களை வாழ்த்தும் உங்கள் அனைவரோடு எனது வாழ்த்துக்களையும் சேர்த்து வாழ்த்துகிறேன். நான் பல்வேறு மாவட்ட செயலாளர்களை பார்க்கும் நல்ல வாய்ப்பை பெற்று உள்ளேன்.

சைதை கிட்டுவும், நானும் எந்த அளவு உடன் பிறவா சகோதரர்களாக இருந்தோம், எந்த அளவுக்கு ஒருவரை ஒருவர் நேசித்தோம் என்பதை எல்லாம் எங்களை உணர்ந்தவர்கள் உணருவார்கள். அவர் என்னிடத்தில் கொண்ட அன்பு காரணமாகத்தான் தனது மகன் பெயரை கருணா என்று சூட்டினார். நிதியையும் சேர்த்து சூட்டியிருந்தால் தலைவர் பெயரை சொல்லி அழைக்க வேண்டுமே என்று கருதி அவ்வாறு சூட்டினார். இன்று இங்கு நடைபெற்ற காதல் கலப்பு திருமணம் எங்கே சாதி உயர்ந்தது என்று குறிப்பிடப்பட்டதோ அந்த சாதியை சேர்ந்த தாரிகா திராவிட சாதியை சேர்ந்த கருணாவை கரம் பிடித்து அனைவரின் வாழ்த்தையும் பெற்று உள்ளார்.

இது ஒரு ஆரிய- திராவிட கலப்பு திருமணம். ஆரியர் கொள்கை வேறு, திராவிட கொள்கை வேறு. திராவிட எண்ணங்கள் பகுத்தறிவு கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் அளவு காலம் மாறியிருக்கிறது. சாதி வேற்றுமை அகலும் காலத்தை உருவாக்கக் கூடியது இளைஞர்கள் தான். சைதை கிட்டுவால் இந்த இயக்கம் எத்தகைய வளர்ச்சி பெற்றது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான்.

எத்தனையோ பேர் இந்த இயக்கத்துக்காக பாடுபட்டு இருக்கலாம். அவர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக விளங்கும் தகுதி கிட்டுவை போன்ற சிலருக்குத்தான் உண்டு. அவர் எதற்கும் அஞ்சாத மனிதர். நெருக்கடி கால சோதனையின் போது எங்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்து எங்களையும், இயக்கத்தையும் காத்த பெருமை அவருக்கு உண்டு. அவர் ஆற்றலும், திறனும் கொண்ட மாவீரர். அவரை போல் இன்னும் பலர் தோன்ற வேண்டும்.

கிட்டு ஆற்றிய தொண்டை தொடர்ந்து ஆற்ற வேண்டும். என்னால் இயக்கத்துக்கு என்ன லாபம் என்று நினைப்பவர்கள் தான் இந்த இயக்கத்தின் ரத்த நாளம். இயக்கத்தால் எனக்கு என்ன லாபம் என்று நினைப்பவர்கள் இயக்கத்தின் புற்று நோய் போன்றவர்கள். கிட்டு சாதாரண தொண்டராக பணியை தொடங்கி எல்லோராலும் பாராட்டப்பட்டவர்.

கிட்டு விட்டுச்சென்ற இடத்தை நிரப்புவோம். இன்று அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் நிழலாக தொடருகிறார். அவரது இல்லத்து குடும்ப விளக்குகள் கருணா- தாரிகா இருக்கிறார்கள். அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

மணமக்களை வாழ்த்திய வர்கள் வருமாறு:-

மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ரகுமான்கான்,  பெரியகருப்பன், சுப.தங்க வேலன், எஸ்.பி.சற்குண பாண்டியன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் வி.பி. துரைசாமி, ஆர்.எஸ். பாரதி, ஜெ.அன்பழகன், மா.சுப்பிர மணியன், சேகர்பாபு, பூச்சி முருகன், தனசேகரன், மு.மகேஷ்குமார், கிருஷ்ண மூர்த்தி, கிண்டி செல்வம், தாயகம் கவி, தொழில் அதிபர் வி.ஜி. சந்தோஷம், வசந்தகுமார், சைதை ரவி உள்பட பலர் வாழ்த்தினார்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கிட்டு என்று சொன்னாலே கிட்டாதது எல்லாம் கிட்டும் : கருணாநிதி புகழாரம்

First Published : 15 November 2012 02:24 PM IST
சைதைக் கிட்டு என்று சொன்னாலே கிட்டாதது எல்லாம் கிட்டும் என்று மறைந்த சைதைக் கிட்டு இல்லத் திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி புகழாரம் சூட்டினார்.
சைதை கா.கிட்டு இல்லத் திருமணத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஆற்றிய உரையின் போது,  இந்த மண மக்களை வாழ்த்துகின்ற வாய்ப்பை கருதி மணமக்கள் வாழ்க வாழ்க என்று உங்களோடு இணைந்து நானும் வாழ்த்துகின்றேன்.
சைதை கிட்டு என்னிடம் எவ்வளவு அன்பு கொண்டவர் என்பதற்கு அடையாளமாகத் தான் தன்னுடைய மகனுக்கு “கருணா” என்ற பெயரை வைத்திருக்கிறார். “கருணாநிதி” என்று முழு பெயரையும் வைக்க வேண்டுமென்று எண்ணினாலும், என்னிடத்திலும், அவரிடத்திலும் “நிதி” இல்லாத காரணத்தால் (கைதட்டல்) நான் என்னிடத்திலும், அவரிடத்திலும் என்று தான் சொன்னேன் - மற்றவர்களையெல்லாம் குறிப்பிடவில்லை. அந்தக் காரணத்தினால் “கருணா” என்ற அளவோடு தன்னுடைய மகனின் பெயரை சூட்டி அழைத்தார். “கருணாநிதி” என்று ஏன் முழுப் பெயரைச் சூட்டி அழைக்கவில்லை என்று கேட்டால், அது தலைவர் பெயரை நான் கூறினேன் என்ற தவறுக்கு ஆளாகி விடுவேன் என்று அவர் பல நேரங்களிலே சொல்லியிருக்கிறார்.
கிட்டுவை நாங்கள் பறி கொடுத்த போது என் மனம் என்ன பாடுபட்டது என்பதை என்னோடு இருந்தவர்கள் தான் அறிவார்கள். கிட்டு என்று சொன்னால் எல்லாமே கிட்டும் - கிட்டு என்று சொன்னால் கிட்டாதது எல்லாம் கிட்டும் - கிட்டு என்று சொன்னால் எட்டாதது எல்லாம் எட்டும் (பலத்த கைதட்டல்). அப்படிப்பட்ட வல்லமையும் ஆற்றலும் திறனும் கொண்ட ஒரு மாவீரரைத் தான் இந்த இயக்கம் பெற்றிருந்தது. இந்த இயக்கத்திலே அப்படிப்பட்ட மாவீரர்கள் இன்னும் தோன்ற வேண்டும் என்ற அவா மிகுதி உடையவன் நான். ஒரு இயக்கத்தில் கிட்டுப் போன்றவர்கள் இருப்பார்களேயானால், அவர்கள் இந்த இயக்கத்திற்கு என்ன செய்தார்கள் என்பது தான் கேள்வியே, அந்தக் கேள்விக்குக் கிடைக்கின்ற பதில் தான் இந்த இயக்கத்தை வளர்க்கக் கூடியதா அல்லது வீழ்த்தக்கூடியதா என்பதை அறுதியிட்டுக் கூறுகின்ற நிலையிலே அமையக் கூடியது என்பதையும் நான் பல நேரங்களிலே எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
நான் அடிக்கடி சொல்வது உண்டு. உன்னால் இந்த இயக்கத்திற்கு என்ன லாபம்? என்று கேட்டு விட்டு நான் சொல்வேன் பல நேரங்களில் - ஒரு இயக்கத்தில் தன்னால் அந்த இயக்கத்திற்கு என்ன இலாபம் என்று கருதுகிறவன் தான் அந்த இயக்கத்தை வளர்க்கின்ற, அந்த இயக்கத்திற்கு உயிர் தருகின்ற இரத்த நாளம் - இயக்கத்தால் தனக்கு என்ன இலாபம் என்று வருந்தி பெருமூச்சு விடுகிறவன் அந்த இயக்கத்திற்குப் புற்று நோய் - என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அப்படிப்பட்ட இரத்த நாளங்களில் ஒருவராக நம்முடைய தம்பி கிட்டு அவர்கள் இருந்தார்கள். அந்த இரத்த நாளம் தான் இடையிலே சில ஆண்டுகளுக்கு முன்பு நாமெல்லாம் கலங்குகின்ற அளவிற்கு - நாம் பெருமூச்சு விடுகின்ற அளவிற்கு நம்மை விட்டு விலகியது, நம்மை விட்டுப் பிரிந்தது. பிரிந்தாலுங்கூட இங்கே நண்பர்கள் எல்லாம் எடுத்துக் காட்டியதைப் போல நிழலாக நம்மோடு இருக்கிறார் கிட்டு. அவருடைய துணிவு நமக்குத் துணையாக இருக்கின்றது. அவருடைய அன்பு நம்மை விட்டு அகலாமல் இருக்கின்றது. அவருடைய தொண்டுள்ளம் நம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் நாம் வாழ வேண்டும். கிட்டு ஒரு சாதாரணத் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கி, அண்ணாவின் தம்பியாக வாழ்ந்தவரே, பெரியாரின் தொண்டனாக இருந்தவரே, எங்களுக்கு எல்லாம் உற்றத் தோழராக விளங்கியவரே, என்று பாராட்டக் கூடிய அளவிற்கு அவர் நம்முடைய மனதிலே நிழற் படமாக ஆகியிருக்கிறார் என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக