வெள்ளி, 16 நவம்பர், 2012

சுங்குடிப் புடவைஉடுத்தியிருக்கிறீர்களா?

சொல்கிறார்கள்

"சுங்குடிப் புடவைஉடுத்தியிருக்கீங்களா?'

சின்னாளப்பட்டி சுங்குடி சேலை விற்பனையில் ஈடுபட்டு வரும் ரவி: சுங்குடி புடவையின் பிறப்பிடம் மதுரை தான் என்றாலும், அதிகமான உற்பத்தி, விற்பனை எல்லாம் இப்போது, சின்னாளப்பட்டியில் தான். இதற்காக திருப்பூரில் இருந்து, சுத்தமான காட்டன் துணிகளை வாங்குகிறோம். பின், சாயம் போடுவது முதல் அனைத்து வேலைகளையும் இங்கேயே செய்கிறோம். சிறுமலை, மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே சின்னாளப்பட்டி அமைந்திருப்பதால், நீருக்கு என்றும் பஞ்சமில்லை.

எங்கள் ஊர் தண்ணீருக்கு விசேஷ குணம் உண்டு. இந்தத் தண்ணீரில் நனைத்து சாயமிடும் போது, தேவையான அளவு துணி சுருங்கிவிடும். இதனால், மேற்கொண்டு அந்த துணி சுருங்குவதற்கு வாய்ப்பில்லை. இதனால், பலரும் எங்களைத் தேடி வந்து சுங்குடிப் புடவைகளை வாங்குகின்றனர்.

பொதுவாக, சுங்குடிப் புடவை என்றால், வயதானவர்கள் உடுத்துவது என்றிருந்த நிலை மாறி, இப்போது இளம்பெண்களும் கட்டத் துவங்கியுள்ளனர். கல்லூரிப் பெண்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மொத்தமாக ஆர்டர் கொடுக்கும் போது, அவர்கள் கொடுக்கும் டிசைன்களிலும் அல்லது எங்களிடம் உள்ள டிசைன்களுக்கு ஏற்ப, செய்து கொடுக்கிறோம். பாரம்பரிய டிசைன்கள் மட்டுமில்லாமல், தற்போது, பெண்கள் விரும்பும் வகையில் பல டிசைன்களிலும், சுங்குடிப் புடவைகளை தயார் செய்து தருகிறோம்.

சின்னாளப்பட்டி சுங்குடிப் புடவைகளின் தனிச் சிறப்பே, அவை முழுக்க முழுக்க காட்டன் புடவை என்பது தான். எனவே, வெயில் காலத்தில், இந்த புடவைகளை பெண்கள் விரும்பி அணிகின்றனர். இந்த சேலைகளின் விலை, மிகக் குறைவு. 150 ரூபாயில் துவங்கி, அதிகபட்சமாக, 500 ரூபாய்க்குள் வாங்கி விடலாம். ஓரடுக்கு, மூன்றடுக்கு சரிகை என, அதன் சரிகையைப் பொறுத்து விலை வேறுபடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக