புதன், 14 நவம்பர், 2012

உலக நீரிழிவு நோய் நாள்


அக்கறை காட்டுவோம் சர்க்கரை மீது: இன்று உலக நீரழிவு நோய் தினம்...

உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால், உணவிலிருந்து சக்தியை எடுக்க முடியாமல் ஏற்படுவதே நீரிழிவு நோய்.இதை குணப்படுத்தும் இன்சுலின் மருந்தை, சார்லஜ் ஹெர்பர்ட் பெஸ்ட் என்பவருடன் இணைந்து கண்டுபிடித்த கனடாவைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் "பிரெட்ரிக் பேண்டிங்கை' கவுரப்படுத்தும் விதமாக, அவரது பிறந்த நாளான நவ., 14, உலக நீரிழிவு நோய் தினமாக ஐ.நா., அறிவித்தது. 2009 - 2013 வரை, "டயபெட்ஸ் கல்வி மற்றும் தடுப்பது' என்பது மையக்கருத்தாக உள்ளது. 2 வகை: நீரிழிவு நோயில், இரண்டு வகைகள் உள்ளன. இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று விடுவது முதல் வகை. இது குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இரண்டாவது வகை, இன்சுலின் போதிய அளவு சுரக்காமல் இருப்பது. இவ்வகை தான், 90 சதவீதம் பேருக்கு உள்ளது. 45 வயதுக்கும் மேற்பட்டோர், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எங்கு அதிகம்: உலகம் முழுவதும், 34 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2030க்குள் இது இரு மடங்காக அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. நீரிழிவு நோயால் இறப்பவர்களில் 80 சதவீதம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள். இந்தியாவில் மட்டும், ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் இது, 7 கோடியாக உயரும் என அஞ்சப்படுகிறது.வாழ்நாள் முழுவதும் துரத்தும் இந்நோய், குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. இவ்வகை குழந்தைகளுக்கு பெற்றோரின் கண்காணிப்பு அவசியம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதோ, குறைவதோ கூட ஆபத்தில் முடியலாம். மருத்துவ பராமரிப்பும், அலோசனையுடன் கூடிய உணவுக் கட்டுப்பாடு அவசியம். அதிக உணவு, குறைவான வேலை என்று இருக்கக்கூடாது.
உடற்பயிற்சி அவசியம்: உடல்
எடை அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை அறிகுறிகள். துவக்கத்திலேயே சிகிச்சை எடுக்கத் தவறினால் கண், இருதயம், சிறுநீரகம், கால் ஆகியவற்றை பாதிப்படைய செய்யும். உணவு முறை, உடற்பயிற்சியால் இரண்டாவது வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக