வெள்ளி, 19 நவம்பர், 2010

கல்கத்தா விசுவநாதன் காலமானார்

இணைய நேயர் வேண்டுகோளுக்கிணங்க ஒளிப்படத்தை வெளியிட்டமைக்குப் பாராட்டுகள். ஆனால்வண்ணப்படமாக மாற்றியுள்ளீர்கள் போலும். தெளிவாக இல்லை. இயல்பான வண்ணத்திலேயே வெளியிட்டிருக்கலாம். துயரத்தில் கருப்பு-வெள்ளைப்படம்  பொருத்தமாகத்தானே இருக்கும்.
2. மூத்த தலைமுறையினரால் நன்கு அறியப்பட்ட கல்கத்தா விசுவநாதனின் மறைவிற்கு அவர்தம் குடும்பதினருக்கும்  தினமணி இணைய
நேயர்களின் இரங்கல்கள். 
இவண் இலக்குவனார் திருவள்ளுவன்

பழம்பெரும் நடிகர் கல்கத்தா விஸ்வநாதன் காலமானார்

First Published : 18 Nov 2010 10:22:14 AM IST

Last Updated : 18 Nov 2010 06:21:42 PM IST

கல்கத்தா, நவ.18: பழம்பெரும் நடிகர் என். விஸ்வநாதன்(81) மாரடைப்பால் காலமானார். ரசிகர்களாலும் திரை உலகத்தினராலும் தமிழகத்தில் கல்கத்தா விஸ்வநாதன் என்றே அறியப்பட்டவர். இவர், நூற்றுக்கும் மேற்பட்ட வங்காள மொழிப் படங்களிலும், தமிழ் மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள வேலூரில் பிறந்த இவர், மனைவி பரோமிதா, மகன் அசோக் ஆகியோருடன் கல்கத்தாவில் குடியேறியவர். நேற்றிரவு கடும் மாரடைப்பு கண்டு இறந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சத்யஜித் ரேயின் கஞ்சன்ஜங்கா, மிருனாள் சென்னின் புனாச்சோ படங்களில் முக்கிய பாத்திரங்களில் இவரின் நடிப்பு பரவலாக இவருக்கு தனிப்பட்ட ரசிகர் வட்டாரத்தைப் பெற்றுத் தந்தது. சத்யஜித் ரே-வுக்கு மிகவும் பிடித்த நடிகராக விளங்கியவர். அவருடைய நகர நாகரிகம் சார்ந்த மிடுக்கான நடிப்பும், மேலைநாட்டு பாணியிலான தோற்றமும் உச்சரிப்பும் ரே-யைக் கவர்ந்திருந்தது. இவருக்கு அப்படிப்பட்ட பாத்திரங்கள் மிகவும் பொருந்துவதாக திரையுலகில் அடையாளம் காணப்பட்டார். கையில் பிரிட்டிஷார் பாணியில் ‘புக்கா’ ஏந்தியவாறு இவர் உச்சரிக்கும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக