தமிழகம்
சென்னை, நவ.15: கோவை என்கவுன்டர் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.கோவையில் சிறுவர்களைக் கடத்தி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மோகன்ராஜ் என்கிற மோகனகிருஷ்ணனை என்கவுன்டரில் கொன்றதாக போலீஸôர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு டிசம்பர் 12-ம் தேதிக்குள் பதில் மனு அளிக்க வேண்டும். அப்போது, என்கவுன்டர் குறித்த அறிக்கையையும் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்றனர். வழக்கு விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
கருத்துகள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 5:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/16/2010 5:57:00 AM