தம் நாட்டுத் தேசிய இனங்களிடையேயும் பிற நாட்டுத் தேசிய இனங்களுக்கும் அமைதியின்மையை ஏற்படுத்தும் நாட்டிற்கு - பிற நாட்டு இறையாண்மையில் தலையிட்டு அந்நாட்டின் மக்களை அழித்தொழித்த நாட்டிற்கு - அமைதி விருது வழங்கும் தகுதியில்லை.அத்தகைய விருதை வாங்குநரும் வெட்கப்பட வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 20 Nov 2010 03:04:12 AM IST
புது தில்லி, நவ. 19: இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் அமைதி விருதுக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான குழு இவரைத் தேர்வு செய்துள்ளது. |25 லட்சமும், பாராட்டுப் பத்திரமும் இவ் விருதினுள் அடங்கும். லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் பதவிக் காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. சோவியத் யூனியன் முன்னாள் அதிபர் மிகைல் கோர்பசேவ், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு இந்த விருது ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக