Chennai வியாழக்கிழமை, நவம்பர் 18, 4:15 PM IST
சென்னை, நவ. 18-
வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறினார். வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு அரபிக்கடல் பகுதிக்கு சென்று விட்ட நிலையில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே லேசாக மழை பெய்து வருகிறது. ஈரப்பத காற்று காரணமாக இந்த மழை பெய்கிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:-
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடல் பகுதிக்கு சென்ற நிலையில் வட தமிழ்நாட்டில் வளி மண்டல சுழற்சியால் மழை குறைந்துள்ளது.
ஆனால் இலங்கை பகுதியில்வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேல் அடுக்கில் சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இனறும் நாளையும் கன மழை பெய்யும்.
இவ்வாறு ரமணன் கூறினார்.
நேற்று அதிக பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 செ.மீ. மழையும், சாத்தாங்காட்டில் 8 செ.மீ. மழையும் பொள்ளாச்சியில் 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
செய்தியில் வளி (காற்று) மண்டலம் எனச் சரியாகக் குறிப்பிட்டுள்ளது. தலைப்பில் வழி எனத்தவறாகக் குறிக்கப் பெற்றுள்ளது. உடனே திருத்த வேண்டுகின்றேன். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன் | |||||
எனக்கு தெரிஞ்சி மழை இன்னும் வரல வந்தா நல்லா இருக்கும் | |||||
சில இடங்களில் வரலாம். வராமலும் இருக்கலாம். இப்படி ஒரு வானிலை மையம் நம்ம தமிழ் நாட்டில். கஷ்டம். ரமணன் | |||||
அப்போ மேல் அடுக்கில் குடியிருப்பவர்கள் எல்லாம் கீழ் அடுக்கில் குடிபெயருங்கள். ஒன்னும் ஆகாது. | |||||
அப்ப சத்தியமா மழை வராது. இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....? ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக