அமேதி நவ. 15: ஊழலுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார். ஊழல் விஷயத்தில் அரசு கடுமையாக நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.ஊழலை ஒழிப்பது மிக முக்கியமான விஷயம். இதில் கடுமையாகவும் கவனமாகவும் அரசு செயல்படும் என்றார் அவர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது சொந்த தொகுதியான அமேதியில் சுற்றுப் பயணம் செய்து வரும் ராகுல் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசினார். 2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விவகாரத்தில் அரசின் நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் இவ்வாறு பதிலளித்தார்.உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. பெரிய அளவில் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் மாநில அரசு நிறைவேற்றவில்லை. அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. சாலைகள் மிக மோசமாக உள்ளன என்றார் அவர்.
கருத்துகள்
கட்சிநலன் கருதி. இராகுல் துணிவான நடவடிக்கை எடுக்கிறார்; மாறுபட்ட சிந்தனையுடன் பேசுகிறார். ஆனால், ஊழலின் உறைவிடமான காங்.கில் இருந்து கொண்டு ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுதான் பெரிதும் நகைச்சுவையாக உள்ளது. பெரிய தலைகளைத் தப்ப விடுவதற்காகச் சிறிய தலைகளை உருட்டி விடுவதைக் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறுவதும் வேடிக்கைதான்.
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 5:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/16/2010 5:33:00 AM