சென்னை, நவ.13- தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு கண்டனம் தெரிவித்து மதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மாசிலாமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஜனநாயக மீட்புக்காக மிசாவில், இலங்கைத் தமிழர் நலனுக்காக கருத்துரிமை காத்திட தடா, பொடா என்றும், தமிழகத்தின் வாழ்வு ஆதாரங்களை காக்கும் போராட்டங்கள் பலவற்றிலும் மக்கள் நலனுக்காக பலமுறை கைது செய்யப்பட்டு நீண்ட நாள் சிறைவாசம் செய்தவர் வைகோ. அது மட்டுமல்ல, சிங்கள் வெறியர்களால் தாக்கப்பட்டு கை, கால்கள் ஊனமாகி வந்த தமிழர்களுக்கு மருத்துவ சிகிச்சையளித்த மனிதநேய செயலுக்காக வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் தடாவில் இருந்ததும் நாட்டு மக்கள் அறிவார்கள்.இந்திய வரலாற்றில் இத்தகைய பெருமை நேருவிற்குப் பிறகு அரசியல் காரணங்களுக்காக அதிக நாள் சிறைவாசம் செய்தவர் என்கிற வரலாற்றுப் பெருமை வைகோவுக்கு மட்டுமே உண்டு.சமீபத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கக் கோரி தீர்ப்பாயத்தின் முன்பு வழக்கறிஞராக வாதாடி உலகத் தமிழர்களின் முன்பு தலைநிமிர்ந்து நிற்கும் உண்மைத் தமிழன் வைகோ என்பதை நாடறியும், உலகத் தமிழர்கள் அறிவார்கள்.மக்களையும் சந்திக்காமல், மக்கள் நலனுக்காகப் போராடாமல் குளுகுளு அறையில் அமர்ந்து கொண்டு குறுக்கு வழியில் பதவி நாற்காலியில் தங்கபாலு போன்றவர்கள் கசங்காத கதர் சட்டையுடன் காலத்தைக் கழிக்கின்ற நபர்களுக்கு வைகோ என்ற பெயரைக் கூட உச்சரிக்கும் தகுதி கிடையாது.தங்கபாலுவுக்கு வேண்டுமானால் வரலாற்றின் சங்கதிகள் மறந்து இருக்கலாம். இப்போது அவர் பதவி நாற்காலியில் எப்படி உட்கார்ந்திருக்கிறார் என்பதை அவரது கட்சியினரே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கடலூரில் தொடங்கி திண்டிவனத்தில் முடிந்த இவரது ஜாமீன் கதை பற்றி அதே கட்சியின் தலைவர்களில் ஒருவரான இளங்கோவனே பேசுகிறார்.பதவியைப் பற்றிக் கவலைப்படாத வைகோ விரும்பியிருந்தால் வாஜ்பாய் அரசில் நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என்று பெரிய பதவியையே வகித்திருப்பார். வைகோவின் தகுதி பற்றி தமிழகத்தில் அனைவரும் அறிவார்கள். இதனை தங்கபாலு போன்ற பதவிப் பிரியர்களின் கூட்டம் தெரிந்திருக்க முடியாது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2010 3:24:00 AM
11/14/2010 3:24:00 AM


By நல்லரசு
11/13/2010 11:28:00 PM
11/13/2010 11:28:00 PM


By Narumugai, Aaliyur
11/13/2010 10:20:00 PM
11/13/2010 10:20:00 PM


By Narumugai, Aaliyur
11/13/2010 10:16:00 PM
11/13/2010 10:16:00 PM


By tamilan
11/13/2010 9:07:00 PM
11/13/2010 9:07:00 PM


By Palanisamy T
11/13/2010 8:58:00 PM
11/13/2010 8:58:00 PM


By M.Natrayan
11/13/2010 8:50:00 PM
11/13/2010 8:50:00 PM


By Naanum Thailanthaan
11/13/2010 8:35:00 PM
11/13/2010 8:35:00 PM


By Naanum Thamilanthan
11/13/2010 8:30:00 PM
11/13/2010 8:30:00 PM


By Patriotic Thamizhan
11/13/2010 8:23:00 PM
11/13/2010 8:23:00 PM


By ROBERT SAMUEL
11/13/2010 7:14:00 PM
11/13/2010 7:14:00 PM


By பொன்மலை ராஜா
11/13/2010 7:07:00 PM
11/13/2010 7:07:00 PM


By பொன்மலை ராஜா
11/13/2010 6:55:00 PM
11/13/2010 6:55:00 PM


By Ka.Radha-Salalah
11/13/2010 6:47:00 PM
11/13/2010 6:47:00 PM


By thamizhan
11/13/2010 6:20:00 PM
11/13/2010 6:20:00 PM


By ganesh
11/13/2010 6:08:00 PM
11/13/2010 6:08:00 PM


By Also Tamil
11/13/2010 5:30:00 PM
11/13/2010 5:30:00 PM


By Karthik
11/13/2010 5:30:00 PM
11/13/2010 5:30:00 PM


By k.seenivasan
11/13/2010 2:06:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English11/13/2010 2:06:00 PM