வியாழன், 18 நவம்பர், 2010

இவற்றைச் சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கினால்

16-Nov-2010


இவைகளை சன் டி.வி.,நிறுவனம் வாங்கினால்.....



ஸ்பைஸ் ஜெட்டின்  பெரும்பான்மையான பங்குகளை சன் டி.வி. அதிபர் க(ல்)லா நிதிமாறன் வாங்கிட்டாராம்.தொ(ல்)லைகாட்சி, சினிமா இப்போது விமான போக்குவரத்து இனி இவர் கையில்.  இப்படியே போனால்.....நகைச்சுவையாக யோசித்ததில்.......


வங்காள விரிகுடா கடலை சன் நிறுவனம் வாங்கியுள்ளது.இனிமேல் அந்தப்பகுதியில் பயணிக்கும் கப்பல்கள் ஆங்காங்கே கடலில் இருக்கும்  டோல் சாவடியில்    சன்னுக்கு சந்தா செலுத்த வேண்டுகிறோம். மீறி சந்தா செலுத்தாமல் பயணிக்கும் கப்பல்களில் ஓட்டை போடப்படும் என்று எச்சரிக்கிறோம்.


தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் உட்பட இந்தியா முழுவதுமுள்ள ஒயின் ஷாப்புகளை  சன் நிறுவனம் ஒட்டுமொத்தமாக வாங்கியுள்ளது. இனி சரக்குகள் பாண்டிச்சேரி விலைக்கே கிடைக்கும்(பாண்டிச்சேரியில்). மற்ற இடங்களில் பாண்டிச்சேரி விலையைவிட பத்துரூபாய் குறைவாக கிடைக்கும். முரசொலிமாறன், கலாநிதிமாறன்,தயாநிதிமாறன் ஆகியோரின் பிறந்தநாளுக்கு மட்டும் சிறப்பு சலுகையாக  பாதி விலைக்கு சரக்குகள் கிடைக்கும்.


தென்னிந்திய ரயில்வே துறையை சன் நிறுவனம் வாங்கியுள்ளது. இனி பயணிகள்  ரயிலுக்காக காத்திருக்கும் வேளையில் சன் பிச்சர்சின் படங்கள் அந்தந்த ரயில் நிலையங்களில் இலவசமாக காண்பிக்கப்படும். ஏதாவது தடங்கலினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், பணம் திருப்பித்தரமாட்டாது. பதிலாக....ஒருமாதத்திற்காக சன் டி.டி.ஹெச்சிற்கு ரீசார்ஜ் செய்து தரப்படும்.


இந்தியா முழுவதும் காற்று உரிமையை சன் நிறுவனம் இயற்கையிடமிருந்து வாங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கான 20 கிலோ காற்று அடைக்கப்பட்ட பேக்கேஜின் சலுகை விலை ரூபாய் இருநூறு மட்டுமே.....ஒரு வருடத்திற்கான காற்றின் சலுகை விலை ரூபாய் 2000  மட்டுமே.
எச்சரிக்கை: எப்போது கடைசியாக காற்று ரீசார்ஜ் செய்துள்ளோம் என்று குறித்துவைத்துக்கொள்வது நல்லது. முன் எச்செரிக்கையில்லாமல்  காற்று துண்டிக்கப்படும். அப்படி துண்டிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, உயிரிழப்பு ஏற்பட்டாலோ சன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த குளறுபடிகளை தவிர்க்க முப்பது வருடத்திற்கான ஆயும் சந்தா பெக்கேஜ்ஜை வெறும் ஐம்பது ஆயிரத்துக்கு பெற்றிடுங்கள். ஆயுள் சந்தா முடியும் முன் நீங்கள் இறந்து விட்டால் மீதமுள்ள காற்று உங்கள் வாரிசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். 

மேலும் விரிவான விளக்கங்களை பெற 000-0000-000 (TOLL FREE) என்ற எண்ணுக்கு கால் செய்யுங்கள். உங்களுக்கு பதிலளிக்க சுமார் 50,000 ரோபோக்களை நாங்கள் தயார் நிலையில் வைத்துள்ளோம்.
இதுவும் நீங்கள் படிக்கத்தான்
என்ன கொடுமை சார் இது?
பால்தாக்கரே எனக்கு கடவுள்: ர‌ஜி‌னி
ஷங்கரால் திருடப்பட்டதாக கூறப்பட்ட எந்திரனின் மூலக்கதை ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக