சென்னை, நவ. 15: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கத் தயார் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு குறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம் மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஜெயலலிதாவின் மனம் நோகக் கூடாது என்பதைப் போல, அந்தத் தீர்மானத்தில் மத்திய அரசையும் அதற்கு ஆதரவாக உள்ள திமுக அரசையும் பலவிதங்களிலும் தேவையில்லாமல் குறை கூறியிருக்கிறார்கள்.அவர்களது நோக்கம், அதிமுக தலைவியைக் குறை கூற வேண்டும் என்பதைவிட, மத்திய-மாநில அரசுகளையும் தாக்கிட வேண்டும் என்பதாகத்தான் உள்ளது. காங்கிரஸ் கட்சியோடு அணி சேர வேண்டுமென்பதற்காக ஜெயலலிதா எப்படியெல்லாம் தானாக முன்வந்து அறிக்கை விடுகிறார் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ அதைக் கண்டிக்கிறோம் என்ற அளவுக்காவது அறிவிக்கை விட முன்வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம் ஓரளவுக்கு மனதுக்கு ஆறுதலாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்


By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 5:43:00 AM
11/16/2010 5:43:00 AM


By Truth
11/16/2010 5:18:00 AM
11/16/2010 5:18:00 AM


By Kaaral Marx Pithan
11/16/2010 3:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English 11/16/2010 3:22:00 AM