பெரும்பாலான குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை. ஆணவத்துடன் அதிகாரத்தில் உள்ளவர்கள குற்றங்களையே நற்செயல்களாகப்பறைசாற்றுவார்கள். இதற்கு மகிந்தவும் விதி விலக்கல்ல. ஆனால், மக்கள் அல்லல்பட்டு ஆற்றாது அழும் கண்ணீர் அவரை அழிக்கும். தெய்வம் நின்று கொல்லும். இயற்கையின் நடைமுறையும் அதுதான். நாளை மாவீரர் வாரம் தொடங்குவதற்கான
வீர வணக்கங்களுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 20 Nov 2010 01:01:42 AM IST
கொழும்பு, நவ.19: இலங்கை அதிபராக 2-வது முறையாக வெள்ளிக்கிழமை பதவியேற்றார் மகிந்த ராஜபட்ச. போர்க்குற்றங்களுக்காக சர்வதேச அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்ட யுத்தத்தில் அப்பாவி மக்கள் பெருமளவில் பலியாக இலங்கை ராணுவம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டையும் ஏற்க முடியாது என அவர் பதவியேற்பி நிகழ்ச்சியில் பேசுகையில் கூறினார்.6 ஆண்டு காலம் பதவிவகிக்கவுள்ள அவர் இலங்கையின் பொருளாதாரத்தை பெருமளவில் முன்னேற்றமடையச் செய்வதாக வாக்குறுதியளித்தார். வியாழக்கிழமை 65 வயதை அடைந்த அவர்,கொழும்பில் கடற்கரையோரம் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற ஆடம்பரமான விழாவில் பதவியேற்றுக்கொண்டார்,அவருக்கு இலங்கை தலைமை நீதிபதி அசோக டி சில்வா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்திற்கு வெற்றி கிடைத்தநிலையில், ராஜபட்ச இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை சந்தித்தார்.அதிபர் பதவிக்கான காலவரம்பை நீக்க கடந்த செப்டம்பரில் அரசியல் சாசனத்தை ராஜபட்ச தலைமையிலான அரசு திருத்தியது. இதனால், ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் அதிபராகலாம் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. இதனால், இவர் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிந்தது.கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவருக்கு அமோக வெற்றி கிடைத்தது. ராஜபட்ச பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி கொழும்பு நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. பதவியேற்பு விழா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முப்படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சி, மார்க்சிஸ்ட்-இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா ஆகிய எதிர்க்கட்சிகள் ராஜபட்சவின் பதவியேற்பு விழாவை புறக்கணித்தன.இவ்வளவு ஆடம்பரமாக இந்த விழாவை நடத்தவேண்டியதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவர் கரு ஜெயசூர்யா கருத்துத் தெரிவித்துள்ளார்.ராஜபட்ச மேலும் பேசுகையில், "ஆசியாவின் அதிசயம்' என இலங்கையை உருவாக்குவேன் என்றார். இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதித் திட்டங்களை பட்டியலிட்ட அவர், தனது சொந்த ஊரான ஹம்பன்தொடாவில் சீனா உருவாக்கி வியாழக்கிழமை தான் துவக்கிவைத்த துறைமுக திட்டத்தை பற்றியும் தெரிவித்தார்.முதல் முறையாக அதிபரானபோது, இலங்கையில் கெüரவமான அமைதி கிடைக்கச் செய்வேன், புதிய இலங்கையை உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை கடைசிவரை காப்பாற்றுவேன் எனவும் அவர் கூறினார்.நாட்டின் முன்னேற்றத்திட்டங்களை நிறைவேற்றியது பற்றி குறிப்பிட்ட அவர், மனித உரிமை மீறலை காரணம் காட்டி மேûலை நாடுகள் நிதியுதவியை நிறுத்திவிட்டபோதிலும் அதை பொருட்படுத்தாது சீனா, ஈரான், லிபியா போன்ற நாடுகளின் உதவியை பெற வேண்டியிருந்தது என அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக