தமிழார்வம் மிக்க இப்பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் அவர்கள், கூடங்களுக்குத் தமிழறிஞர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டும். பல்கலைக்கழக வளாகங்களில் எங்கு நோக்கினும் ஆங்கில அறிவிப்புகளே கண்களுக்குக் காட்சியளிக்கின்றன. எல்லா அறிவிப்புகளிலும் தமிழுக்கு முதன்மை தரவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
27- இல் முதல்வர் திறந்து வைக்கிறார்
First Published : 20 Nov 2010 03:11:06 AM IST
வேலூர், நவ. 19: விஐடி பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர், அறிஞர் அண்ணா சிலைகளை இம்மாதம் 27-ம் தேதி மாலை 4.30 மணியளவில் முதல்வர் கருணாநிதி திறந்துவைக்கிறார். பின்னர், விஐடியில் 60 கோடியில் புதிதாகக் கட்டப்பட உள்ள காயிதே மில்லத் முகமது இஸ்மாயில், விஞ்ஞானி சார்லஸ் டார்வின் ஆகியோர் பெயர்களிலான புதிய விடுதிக் கட்டடங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். விழாவுக்கு விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமை வகிக்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக