ஈரோடு, நவ. 12: இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழலில் தொடர்புடையவராகக் கருதப்படும் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார். "தினமணி' நிருபரிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:÷அமைச்சர் ஆ.ராசா பதவி விலக வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொண்டாலும், அதிமுக ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்று ஜெயலலிதா சொல்லியிருப்பது அவருடைய கருத்து.÷ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சுதந்திரம் பெற்று ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சில குற்றச்சாட்டுகள் மத்திய அரசு மீது வரும்போது, உண்மை இல்லை என்றாலும் கூட சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலகியுள்ளனர். அரியலூரில் ரயில் விபத்து நடைபெற்றபோது, சம்பந்தமே இல்லாத அப்போதைய அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். ÷இதேபோன்று பல நிகழ்வுகளைச் சொல்லமுடியுóம். தற்போது கூட, குற்றம் உண்மையா, பொய்யா என விசாரணை தொடங்கி முடியும் முன்பே, சவாண், கல்மாடி, சசிதரூர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.÷திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா உடனடியாகப் பதவி விவகுவதுதான் சரியானதாக இருக்கும். கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்பவர்கள் காங்கிரûஸ பார்த்தாவது பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்க வேண்டுóம் என்று கட்சி மேலிடத்திற்குத் தெரிவித்துவிட்டோம். மேலிடம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்றார் இளங்கோவன்.
கருத்துகள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2010 3:37:00 AM
11/14/2010 3:37:00 AM


By Unmai
11/13/2010 10:59:00 PM
11/13/2010 10:59:00 PM


By N. Sridharan
11/13/2010 9:13:00 PM
11/13/2010 9:13:00 PM


By SAVITHIRI AMMA,SRIRANGAM
11/13/2010 9:08:00 PM
11/13/2010 9:08:00 PM


By Indian
11/13/2010 8:30:00 PM
11/13/2010 8:30:00 PM


By ROBERT SAMUEL
11/13/2010 7:25:00 PM
11/13/2010 7:25:00 PM


By ஈசன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/13/2010 7:03:00 PM
11/13/2010 7:03:00 PM


By SANTHANA RAMAN,SURILIPATTY
11/13/2010 6:37:00 PM
11/13/2010 6:37:00 PM


By abhi
11/13/2010 5:15:00 PM
11/13/2010 5:15:00 PM


By வச்சா குடுமி
11/13/2010 5:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English11/13/2010 5:12:00 PM