ராமநாதபுரம், நவ. 12: மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னை உலகமெங்கும் வசிக்கும் தமிழக மக்களுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: 1999 கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கியதில் ஊழல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மகாராஷ்டிர முதல்வர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதன் மொத்த மதிப்பு | 15 கோடி. ஆனால், வரலாறு காணாத ஊழல் செய்துள்ள மத்திய அமைச்சர் ஆ. ராசா குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்து குரல் கொடுத்தும், இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கை சமர்ப்பித்தும் அவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. தானாகவே முன்வந்து ராஜிநாமா செய்திருக்க வேண்டும். அல்லது தமிழக முதல்வரே தனது கட்சிக்காரர் என்றும் பாராமல் அவரை ராஜிநாமா செய்ய வைத்திருக்க வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை. மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் இச் செயல் உலகமெங்கும் வசிக்கும் தமிழர்களுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஊழல் தொகை | 1.76 லட்சம் கோடிக்கும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். காங்கிரஸ்டன் கூட்டணி வைத்துக்கொள்ள ஜெயலலிதா தயார் என் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. ஏனெனில், அவர் பதவிக்காக அவ்வாறு சொல்லவில்லை. ராசாவை நீக்கி, தமிழக மக்களைக் காப்பாற்றவே அவ்வாறு அறிக்கை விடுத்துள்ளார். ஏழைகளுக்கு இலவசமாக 2 ஏக்கர் நிலம் வழங்குவதாகவும், வீட்டுமனை இல்லாதோருக்கு 3 சென்ட் வீட்டுமனை வழங்குவோம் எனவும் சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அந்த இரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. கலைஞர் வீடு கட்டும் திட்டம், இலவசமாக மின் மோட்டார்கள் வழங்கும் திட்டம் ஆகியவை ஏமாற்றுத் திட்டங்கள்தான் என்பதை மக்களும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.
கருத்துகள்

இவண் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2010 3:46:00 AM
11/14/2010 3:46:00 AM


By அன்பன்
11/14/2010 3:06:00 AM
11/14/2010 3:06:00 AM


By அன்பன்
11/14/2010 3:03:00 AM
11/14/2010 3:03:00 AM


By அன்பன்
11/14/2010 3:00:00 AM
11/14/2010 3:00:00 AM


By அன்பன்
11/14/2010 2:58:00 AM
11/14/2010 2:58:00 AM


By Wounded Tamil
11/14/2010 12:03:00 AM
11/14/2010 12:03:00 AM


By Nallavan
11/13/2010 9:52:00 PM
11/13/2010 9:52:00 PM


By N. Sridharan
11/13/2010 8:53:00 PM
11/13/2010 8:53:00 PM


By Joevalan Vaz
11/13/2010 8:41:00 PM
11/13/2010 8:41:00 PM


By S Raj
11/13/2010 7:56:00 PM
11/13/2010 7:56:00 PM


By அண்ணாத்தம்பி
11/13/2010 6:24:00 PM
11/13/2010 6:24:00 PM


By SANKUNITHEVAN,SAPTUR
11/13/2010 1:46:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English 11/13/2010 1:46:00 PM